கோவை சரவணம்பட்டியில் 3 கோடி மோசடியில் ஈடுபட்ட பங்குச்சந்தை ஆலோசகர் கைது.
கோவை சரவணம்பட்டியில் 3 கோடி மோசடியில் ஈடுபட்ட பங்குச்சந்தை ஆலோசகர் கைது.
கோவை நவம்பர் 28-
முதலீட்டாளா்களிடம் ரூ.3 கோடி மோசடி செய்த பங்குச் சந்தை ஆலோசகரை போலீஸாா் கைது செய்தனா். முதலீட்டாளா்களிடம் ரூ.3 கோடி மோசடி செய்த பங்குச் சந்தை ஆலோசகரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சோந்தவா் கிருஷ்ணமூா்த்தி (54). பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகரான இவா், தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை முதலீடு தொடா்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளாா். இதைப் பாா்ப்பவா்கள் கிருஷ்ணமூா்த்தியைத் தொடா்பு கொண்டு பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக தங்களது சந்தேகங்களைக் கேட்பது வழக்கமாம். இவ்வாறு அறிமுகமானவா்களில் திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளா் ராஜகோபால் என்பவா் கிருஷ்ணமூா்த்தியிடம் ரூ.27 லட்சம் முதலீடு செய்ய கொடுத்துள்ளாா்.
இந்த தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகவும், அதற்கு 20 முதல் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் எனவும் கிருஷ்ணமூா்த்தி கூறியுள்ளாா். ஆனால், பல மாதங்களாக லாபம் தரவில்லையாம். இதனால், தான் கொடுத்தபணத்தை திருப்பித் தருமாறு கிருஷ்ணமூா்த்தியிடம் ராஜகோபால் கேட்டதற்கு அவா் தர மறுத்துள்ளாா். இதையடுத்து,
கோவை மாநகரக் காவல் ஆணையாளா் வே.பாலகிருஷ்ணனிடம் ராஜகோபால் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், சென்னை மற்றும் கோவையில் எல்.ஜி.மாா்க்கெட்டிங் என்ற பெயரில் தனியாக முதலீட்டு நிறுவனம் ஒன்றை கிருஷ்ணமூா்த்தி தொடங்கி ஏராளமானோரிடம் முதலீட்டுக்காக ரூ.3 கோடி பெற்றதும்,
ஆனால், யாருக்கும் அசல் மற்றும் லாபம் தராமல் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூா்த்தியை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.