ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சமூக விழிப்புணர்வுக்காக “விபத்திலிருந்து பாதுகாக்கும்” மாதிரி பயிற்சியை நடத்தினார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சமூக விழிப்புணர்வுக்காக “விபத்திலிருந்து பாதுகாக்கும்” மாதிரி பயிற்சியை நடத்தினார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை RTO அலுவலக பிரதான சாலை அருகே விபத்துதிலிருந்து பாதுகாக்கும்” மாதிரி பயிற்சியை நடத்தினார்கள்.இந்நிகழ்வில் போக்குவரத்துக்கு காவல்துறை துணை ஆணையர் கலந்து கொண்டார். ஊழியர்களும், பொதுமக்களும் எதிர்பாராத சில விபத்துகளை சமாளிக்க இந்த மாதிரி பயிற்சி உதவும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இந்த பயிற்சியை நடத்துகிறது.
RTO அலுவலக பிரதான சாலைக்கு அருகில் வெளிப்புற விபத்து மாதிரி பயிற்சி” நடத்தியது. இந்த பயிற்சியில் 21 பயணிகளும், 1 ஓட்டுநரும் கலந்துகொண்டனர். இதில் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க மின் கம்பத்தில் மோதியது. மருத்துவக் குழு மற்றும் சேவைப் பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவ அவசரகால உதவியாளர்களும் தயாராகஇருந்தார்கள்
அவசரநிலை ஏற்பட்டவுடன், வெளிப்புற அவசரநிலையைக் குறிக்க மருத்துவமனையில் “கோட் மஞ்சள்” (Code Yellow)அறிவிக்கப்பட்டது. அவசரகால குறியீடு மஞ்சளில் உள்ள ஐந்து குழுக்கள் விரைந்தன :1. தள மீட்புக் குழு, 2.உள் சோதனைக் குழு, 3.கார்டன் குழு, 4.காப்புக் குழு மற்றும் 5.நோயாளி தகவல் மேலாண்மைக் குழு.
அவசரநிலை ஏற்பட்ட உடனேயே, தள மீட்புக் குழு விரைந்து நோயாளிகளுக்கு முதலுதவி செய்தது, மேற்கொண்டு அவர்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவோர்களுக்குஉயர் பாதுகாப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். நோயாளிகளை மீண்டும் பரிசோதித்து அவர்களை இடம் மாற்றியது. மொத்தத்தில். 5 நோயாளிகள் சிவப்பு சிகிச்சை உயர் முன்னுரிமை பிரிவில் இருந்தனர், அவர்களில் இருந்து நான்கு பேர் ICU க்கு மாற்றப்பட்டனர், ஒருவர் US ஸ்கேன் முடித்த பின்பு அறுவைசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்;’ பாதிக்கப்பட்ட 8 பேர் மஞ்சள் சிகிச்சை கீழ் பிரிவில் பிரிக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டனர், பின் கண்காணிப்பிற்காக அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட 2 பேர் பச்சை பிரிவு பாதுகாப்பு சோதனையில் வைக்கப்பட்டார்கள் பின் உள்நோயாளிகளின் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 பேரும் வழக்கமான சோதனைக்குப் பிறகு அவசரநிலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் . 2 நோயாளிகள் கருப்பு சோதனை பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நம் கார்டன் குழுவின் உதவியுடன் மாற்றப்பட்டனர். மீட்பு குழு உறுப்பினர்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள
நோயாளிகளை கவனித்துக்கொண்டனர். இந்த முழு மாதிரி பயிற்சியும் பதிவு செய்யப்பட்டது, ஊடகங்கள் இருந்தன. இந்நிகழ்வில் போக்குவரத்துக்கு காவல்துறை துணை ஆணையர் கலந்து கொண்டார். பொதுமக்களிடையே பீதியோ, குழப்பமோ ஏற்படாத வகையில் இது ஒரு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி என்று சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.இந்த மாதிரி பயிற்சி வெற்றிகரமாக நடந்தது மேலும் இந்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியின் நோக்கம், நடைமுறைகளின் செயல்களையும் மற்றும் உண்மையான அவசரநிலையின் போது ஏற்படும் பதட்டத்தை குறைக்க உதவும். இடையூறு ஏற்படாமல் உயிர்களையும் சுற்றுச்சூழலையும்.பாதுகாப்பதே முதன்மையான எங்கள் மருத்துவமனையின் குறிக்கோள். ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு எந்த அவசர நெருக்கடியையும் சமாளிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் சிறு காயங்கள் முதல் கடுமையான நோய்கள் வரை, மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் மிக உயர்ந்த கவனிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது