கொங்கு சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர.
கொங்கு சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர.
கோவை அக் 3,
கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக,சென்னை சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமி கோவையில் தனது கிளையை துவங்கியது.இதன் முதல் போட்டியாக 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கொங்கு சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி,துடியலூர் தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள எமரால்டு மைதானத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில்,பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த எட்டு அணிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.. இதில் இறுதி போட்டியில் பிரைட் மற்றும் நர்ச்சூர் அணிகள் விளையாடியதில்,பிரைட் அணி நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்த அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை,. சென்னை சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமியின் நிறுவனர் ராமகிருஷ்ணன் மற்றும் முன்னால் கவுன்சிலர் குணசேகரன் ஆகியோர் வழங்கினர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன் பள்ளி மாணவர்களிடையே கால்பந்து போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்துவதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,கால்பந்து விளையாடுவதில் ஆர்வமுடையை ஏழை பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.