கோவை மாநகர் மாவட்ட விசிக ஆலோசனை கூட்டம் நடந்தது

Spread the love

 

விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு குறித்த கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமையில் நடந்தது.

கோவை திருச்சி சாலையில் உள்ள நிம்மதி ஓட்டலில் உள்ள அரங்கில் வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு குறித்த விடுதலை சிறுத்தைகள் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்வில் முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய செயலாளர் மறைந்த சீதாராம் யெச்சூரி திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செயற் குழு கூட்டத்தில் மாநாட்டிற்கான மேலிடப் பொறுப்பாளர்கள் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மண்டல செயலாளர் வை.குடியரசு மற்றும் மகளிரணி ரஹ்மத்நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வரவேற்புரை கோட்டை சேது வழங்க இறுதியாக கோவை மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் கோவை ராஜா நன்றியுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட தொண்டரணி செயலாளர் பாலகிருஷ்ணன்,நா.ச.இளவரசன்,கொங்கு சம்பத்,தோழர் மாணிக்கம், தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் முகமது அலி,பகுதி கழக செயலாளர்கள், மகளிரணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post *குரூப் 2 தேர்வு: கோவையில் ஆர்வத்துடன் வந்த தேர்வர்கள்!*
Next post பஹ்ரைனில் USD 16.2 மில்லியன் முதலீட்டை அறிவித்தது செமிகண்டக்டர்-சிப்-உற்பத்தியாளர் பாலிமாடெக்.