Vogue Eyewear கண் கண்ணாடிகள் விளம்பர தூதர் டாப்ஸி பன்னுவுடன் அறிமுகம்

Spread the love

 

Vogue Eyewear கண் கண்ணாடிகள் விளம்பர தூதர் டாப்ஸி பன்னுவுடன் அறிமுகம்

சென்னை செப் 17, தரமான, நம்பகத்தன்மையுடனும், நாகரிகமான கண் கண்ணாடிகளின் விற்பனை இயக்கத்துக்கு பெயர் பெற்ற Vogue Eyewear நிறுவனம் தனது விளம்பர தூதுவராக டாப்ஸி பன்னுவுடன் இணைந்து உள்ளது. மேலும், எதிர்வரும் நாட்களுக்கு ஏற்ப நவீன ரக கண் கண்ணாடிகளின் தொகுப்புகளை டாப்ஸி பன்னு உடன் இணைந்து அறிவித்திருப்பதை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரத்தியேக கண் கண்ணாடிகள் தொகுப்பு, நவீன நேர்த்தி மற்றும் துல்லியமான நுட்பங்களின் கலவையை உள்ளடக்கியுள்ளது. இது டாப்ஸியின் தனித்துவமான பாணியையும், ஃபேஷன் ஃபார்வேர்ட் டிசைன்களில் Vogue Eyewear நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

 

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரக கண் கண்ணாடிகளில், “டாப்ஸி X Vogue Eyewear” என்ற நுண்ணிய இனை முத்திரையும், நடிகையின் லோகோவும் அச்சிடப்பட்டுள்ளது. அனைத்து கண்ணாடி பாணிகளும் உயர்தர பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், நீடித்த உறுதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் லென்ஸ்கள் அழகான, தனி பயனாக்கப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட பாதுகாப்பு கவசத்துடன் 100 விழுக்காடு UV பாதுகாப்பை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து Vogue Eyewear நிறுவனத்தின் பிராண்டு குழும தலைவர் குஞ்சன் சைகள் கூறுகையில்,Vogue Eyewear தொடர்ந்து தனது தனிப்பட்ட வெளிப்பாட்டை கொண்டாடி வருகிறது. தங்கள் நிறுவனங்களின் கூட்டு சேகரிப்பு மூலம் டாப்ஸி பன்னு உடனான எங்கள் ஒப்பந்தம், தங்கள் நிலையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதை எண்ணி பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.

ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு நிறுவனமானது, பெனல்லி மற்றும் ஸோன்டெஸ் சூப்பர்பைஸின் உலகளாவிய ரகங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பு
Next post டிதமிழ் சேனல் புதுப்பிக்கப்பட்டது.