மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது.
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தில்லியில் உலக மையத்தைத் தொடங்குகிறது.
சென்னை செப்17,
மெல்போர்ன் பல்கலைக்கழகம் தனது முதல் மெல்போர்ன் உலக மையத்தை தில்லியில் தொடங்கியது. இதன் மூலம் தன் உலகளாவிய இருப்பைக் குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்தியுள்ளது. இந்திய மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள், இங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் கல்விப் பங்காளர்களுடன் கூட்டுறவை உருவாக்கி ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கு முக்கிய பிரதிநிதிகள் வருகை தருவதே இந்த சாதனையின் ஒரு பகுதியாகும்.மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (உலகளாவிய கலாச்சாரம் மற்றும் அலுவல்பணி) பேராசிரியர் மைக்கேல் வெஸ் கூறும்போது தில்லியில் அமையும் எங்களுடைய உலக குளோபல் மையம் இந்தியாவிற்கும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்விசார்ந்த ஒத்துழைப்பை வளர்ப்பதில் எங்களது நீண்டகால கூட்டுமுயற்சியில் விளைந்த ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும். 16 ஆண்டு கால நிறுவனக் கூட்டுறவை அடிப்படையாகக் கொண்டு கல்வியின் மூலமும் ஆராய்ச்சியின் மூலமும் சமூக நன்மைக்காக இணைந்து பணியாற்றும் எங்கள் பணிநோக்கத்துக்கு இணங்க இந்தியாவுக்குள் எங்கள் திறனை வலிமைப்படுத்தி மேம்படுத்த எங்களை அர்ப்பணிக்கிறோம்” என்றார்.“இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட எங்கள் உலகளாவிய முயற்சி ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான அறிவு மையமாக மாறும் எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. சர்வதேச ஆராய்ச்சியின் ஒத்துழைப்புடன் கல்வி மேம்பாட்டை ஒன்றிணைக்கிறது. தில்லி மெல்போர்ன் உலக மையம் இந்தியாவில் எங்கள் கூட்டு முயற்சியின் முன்மாதிரியை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பகுதியின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒருவருக்கொருவர் நன்மை பயக்கும் உறவுகள் மூலம் திறனையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று பேராசிரியர் வெஸ்லி மேலும் கூறினார்.