பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் : நிறுவன தின விழா

Spread the love

 

 

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் : நிறுவன தின விழா

கோவை அக் 5,

கோவை, செப்.30 பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும்

ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் டி.எம். சுப்பாராவ் வரவேற்புரை ஆற்றினார்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சென்னை கீழ்பாக்கம் லைஃப்லைன் குரூப் ஹாஸ்பிடல் தலைவர் டாக்டர் ஜே. எஸ் ராஜ்குமார்

சிறப்பு விருந்தினராக

கலந்து கொண்டு

பேசினார். பல்வேறு மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்களான கொச்சியில் உள்ள அப்பல்லோ அட்லக்ஸ் மருத்துவமனை ரோபோட்டிக் – லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிறுவனர் டாக்டர் ஊர்மிளா சோமன், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை பேராசிரியர் டாக்டர் எம்.மலர்விழி, கோயம்புத்தூர் எஸ் ஜி கேஸ்ட்ரோ கேர் நிறுவனர் டாக்டர் எம். கணேஷ், கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை உடல் பருமன் மற்றும் நீரிழிவு மையத்தின் தலைமை ஆலோசகர் டாக்டர் எஸ். சரவணகுமார் ஆகியோர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பி. எஸ்.ஜி மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் ஜி.சுமித்ரா நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் தலைவர் ஜி. ஆர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி குழுமத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் , கல்லூரியிடையே கலை இலக்கியப் போட்டியில் பரிசளிப்பு
Next post திமுக மருத்துவ அணியின் பணிகள் குறித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடந்தது.