காட்டு யானை கூட்டம் அட்டகாசம் – உணவகங்கள் சேதம்
கோவை துடியலூர் வன மலைக்கோவில் உணவு கூடத்தை சேதபடுத்திய காட்டுயானை கூட்டம்
கோவை அக் 9,
கோவை,துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின் மலை குன்றில் சக்தி வாய்ந்த பொண்ணூத்தம்மன் கோவில் உள்ளது ,இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானம் நடைபெறும், இந்த நிலையில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழாக்காக கொண்ணுத்தம்மன் கோவிலில் விழா குழுவினர் சார்பில் விஷேச பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வணங்கி பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வருகிறார்கள், இதை தொடர்ந்து, மலை மேல் உள்ள பொண்ணுத்தம்மன் கோவிலில் நேற்று இரவு நான்குக்கிற்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் ஒன்று உணவு தேடி வந்தது இதில் சமையல் கூடத்தில் புகுந்து உணவை தேடியது உணவு இல்லாததை கண்ட யானைகள் சமையல் கூடத்தை உடைத்து சேதப்படுத்தியது, மேலும் அங்கு உள்ள பாத்திரங்கள்,பர்னிச்சர் பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது,
காலையில் பூஜைகள் செய்ய பூசாரி கோவிலுக்கு சென்ற போது கோவில் வளாகத்தில் யானைகள் வந்து சென்ற தடம் இருப்பதை கணடவர்கள் அங்கு உள்ள சமையல் கூடத்தை உணவு தேடி வந்த காட்டு யானைகள் உணவு இல்லாதது பார்த்த யானைகள் சமையல் பாத்திரங்கள்,அடுப்பு, உணவு பொருட்களை சேதபடுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், இதை தொடர்ந்து வனத்துறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
இதனை கண்ட பக்தர்களும் மிரட்சியுடன் பார்த்து சென்றனர், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும்,வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் கவனமுடன் வந்து செல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்தனர்.