கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் – சார்பதிவாளர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு

Spread the love

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் – சார்பதிவாளர் உள்பட இருவர் கைது

கோவை அக் 9,

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 13 லட்சத்து 35 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் உட்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப்பதிவிற்கு வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலிவலகம் சென்றபோது 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.இது குறித்து அவர்

லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.இதன் அடிப்படையில், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கருப்பசாமியிடம் கொடுத்து அனுப்பினர். இன்று மாலை 7 மணி அளவில்

லஞ்சப் பணத்தை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார். பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.மேலும்

சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் நான்கு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அதில் கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து்

இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த மாதம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கணக்கில் வராத 1.5 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மான் வேட்டையாடிய ஐவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்
Next post கிணற்றில் விழுந்த ஜோடி நரிகளை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்ட சங்கரன்கோவில் வனத்துறையினர்