கிணற்றில் விழுந்த ஜோடி நரிகளை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்ட சங்கரன்கோவில் வனத்துறையினர்
கிணற்றில் விழுந்த ஜோடி நரிகளை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்ட சங்கரன்கோவில் வனத்துறையினர்
சங்கரன்கோவில் அக் 9,
சங்கரன்கோவில் அருகே அரியூர் கிணற்றில் விழுந்த இரண்டு நரிகளை(ஆண்,பெண் ஜோடிகள்) தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்ட வனத்துறையினர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள அரியூர் மலையடிவாரத்தில் உள்ள புன்னைவனப்பேரி கிராமத்தில் ராமஜெயம் என்பரது விவசாய கிணற்றில் இரண்டு நரிகள்(ஆண், பெண் ஜோடி நரிகள்) தண்ணீரில் உயிருக்கு போராடிகொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்…
விரைந்து வந்த வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் இரண்டு ஆண், பெண் ஜோடி நரிகளை பத்திரமாக உயிருடன் மீட்டு வெளியே விட்டனர்…
கிணற்றில் இருந்து வெளியே மீட்ட இரண்டு ஆண், பெண் நரிகளும் ஒரே பாதையில் மீண்டும் ஜோடியாக சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஓடியது…
கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆண், பெண் ஜோடி இரண்டு நரிகளை பத்திரமாக உயிருடன் மீட்ட வனத்துறையினரையும், தீயணைப்புத்துறையினரையும் பொதுமக்களும், சமூக ஆர்;வலர்களும் பராட்டினார்கள்.