வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு

Spread the love

வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒத்துழைப்பு

 

கோவை டிச 18,

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடனான கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. வளர்ந்து வரும் ஆட்டோமோட்டிவ் தொழிற்சாலையினைக் குறித்த திறன்களைப் பெற மாணவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாது இத்துறையில் அவர்கள் தொழில்முறை ரீதியான வெற்றியை அடைவதற்கு அவர்களைத் தயார்ப்படுத்துகின்றது. இந்த கூட்டாண்மை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவத்தை வழங்குவதற்காக, தொழில்த் துறையினில் அவர்களை நன்கு தயார்ப்படுத்துவதை இந்த முயற்சியானது உறுதி செய்கின்றது.

இந்த கூட்டாண்மையானது, இரண்டு முதல் நான்கு செமஸ்டர் கிரெடிட் அடிப்படையிலான திட்டத்தை துவங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழில் துறையை மையமாகக் கொண்ட பாடங்களை வலியுறுத்துவது மட்டுமல்லாது தொழில் துறையில் திறமையான நிபுணர்களை உருவாக்குகின்றது. நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் மூலம், மாணவர்களை தயார்ப்படுத்துவதில் வால்வோ முக்கிய பங்கு வகிக்கின்றது.

பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பங்களை கற்பிப்பதில் அம்ருதாவின் ஆசிரியர்களுக்கு வால்வோ பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களின் பொறியியல் சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. ஆட்டோமொபைல் உலகிற்கு வரும் அத்தகைய பெண்கள் வாகன வல்லுனர்களாவதற்கு உதவித்தொகையும் வழங்கப்படுவது மட்டுமல்லாது பல்வேறு தொழில்முறை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நடைமுறை திறன்களை வளர்ப்பதில் இந்த பெண்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.”

இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைக் குறித்து, அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் கல்வி மற்றும் தொழில் துறை கூட்டாண்மையின் இயக்குனர் திரு. சுரேஷ் கோடூர் அவர்கள் கூறுகையில், “இக் கூட்டாண்மையானது, கல்விசார் சிறப்பை தொழில்துறை பொருத்தத்துடன் ஒருங்கிணைப்பதில் அம்ருதாவின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. உலகப் புகழ்ப்பெற்ற வோல்வோ குழுவுடன் இணைந்து பணியாற்றுவது, எங்கள் மாணவர்களின் தொழில்துறை திறன்களை மேலும் ஆழமாக்குவது மட்டுமல்லாது வாகனத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகுக்கின்றது.

இந்த ஒத்துழைப்பு மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாது ஆராய்ச்சி சார்ந்த கல்வியையும் ஆதரிக்கின்றது. வோல்வோ குழு ஊழியர்களுக்கு அம்ருதாவுடன் உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கின்றது.

வால்வோ குரூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. கமல் பாலி கூறுகையில், “இந்தக் கூட்டாண்மையானது கல்வி மற்றும் தொழில்துறையை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் திறமையான பணியாளர்களை உருவாக்குவது மட்டுமல்லாது அம்ருதா போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் கால தலைமுறையின் பொறியாளர்களை தயார்ப்படுத்த உதவுகின்றது. இம்முயற்சியானது வாகனத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.”

டிரக், பஸ், கட்டுமான இயந்திரங்கள், கடல் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் ஆகியவற்றில் வால்வோ குழுவானது முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வால்வோ உற்பத்தி திறன்களுடன், நிதி மற்றும் சேவை தீர்வுகளில் முக்கிய கவனம் செலுத்துகிறது. 105,000 ஊழியர்களுடன், வோல்வோ 18 நாடுகளில் இயங்கி வருகின்றது, அதே நேரத்தில் உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட சந்தைகளில் அதன் சேவைகளை வழங்கி வருகின்றது.

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் இம்முயற்சியை வழிநடத்தி வருகின்றது, இம்முயற்சியானது கல்விக்கும், தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நடைமுறை சார்ந்த, தரமான கல்வியை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை எதிரொலிக்கிறது. இந்த கூட்டாண்மையின் மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வரும் கால தலைவர்களை உருவாக்கி வருகின்றது.

புகைப்படம்: அம்ருதா பல்கலைக்கழகம் மற்றும் வால்வோ குரூப் இந்தியா இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post Amrita University Launches Kerala’s First Integrated Multi-Lab System for Environmental Sustainability