எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
எஸ்டிபிஐ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் முஸ்தபா தலைமையில் நடந்தது.
கோவை டிச 21,
எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டசெயற்குழு கூட்டம்மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மன்சூர் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் நிர்வாக வளர்ச்சி சம்பந்தமாக மாவட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி வக்பு சொத்துகளை பாதுகாப்பது மற்றும் 1991 வழிபாட்டுதளங்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற இரண்டு அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாபெரும் மாநாடு கோவையில் நடத்துவது,தொகுதி விரிவாக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அந்தந்த பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனு அளிப்பது, வியாபார ஸ்தலங்களுக்கு அரசு கொண்டு வந்த அநியாயமான வரியை முழுமையாக ரத்து செய்வது,வர்த்தக வளர்ச்சிக்காக அரசிடம் கோரிக்கை வைப்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்டம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஷீர் நன்றி உரையாற்றினார்.