ரயில்வே பாலத்தில் சுரங்கப்பாதை தேவை பீளமேடு பொதுமக்கள் கோரிக்கை.
ரயில்வே பாலத்தில் சுரங்கப்பாதை தேவை பீளமேடு பொதுமக்கள் கோரிக்கை.
கோவை நவம்பர் 21-
கோவை:பீளமேடு ரயில்வே பாலத்தின்கீழ் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி, 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா, மாவட்ட நிர்வாகத்திடம் அளபீளமேடு ரயில்வே பாலம் (கடவு எண்:7) கட்டும் முன், வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதையுடன் வரைபடம் வடிவமைக்கப்பட்டது.
பாலம் கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், எம்.பி.,கள் உள்ளிட்டோர் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் முறையிட்டும், சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை இல்லை.பள்ளி, கல்லுாரி செல்வோர்,
ரேஷன் கடை உள்ளிட்ட தேவைகளுக்காக செல்வோர், கர்ப்பிணி பெண்கள் என, அனைவரும் சுரங்கப்பாதை இல்லாததால், சிரமத்துக்கு ஆளாகின்றனர். கலெக்டர், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே, துறை சார்ந்த ஆய்வுகள் செய்து, சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பீளமேடு மக்களின் கோரிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.