தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காத்திட மத்திய,மாநில அரசுகள் முன் வரவேண்டும் – மனித உரிமைகள் ஆணையத்தில் தலித் ஜெயராஜ் கோரிக்கை
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காத்திட மத்திய,மாநில அரசுகள் முன் வரவேண்டும் – மனித உரிமைகள் ஆணையத்தில்
தலித் ஜெயராஜ் கோரிக்கை
கோவை நவ 22,
கோவை வால்பாறை பகுதியை புலிகள் காப்பகமாக மாற்றிட மத்திய,மாநில அரசுகளின் கொள்கை முடிவை கைவிட்டு,அங்கு வாழும் தோட்டத்தொழிளாலர்கள் வாழ்வாதிரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைத்திற்கு டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி/எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் தலித் ஜெயராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.அதன் விபரம் வருமாறு:-
வனங்கள் நிறைந்த பகுதியான வால்பாறை பகுதியில் உள்ள மக்கள் தேயிலை தோட்ட தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் உலகின் அறிய வகை விலங்கான புலிகளை காக்கும் பொருட்டு,வனம் நிறைந்த பகுதியான வால்பாறையை புலிகள் காப்பகமாக மத்திய,மாநில அரசுகள் மாற்ற முயற்சி எடுத்து வருகின்றது. இதில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் தோட்டத் தொழிலாளர்கள் நலன் காத்திட உருவாக்கப்பட்டது டேன்டீ நிறுவனம்.தற்போது இந்த அரசுக்கு சொந்தமான டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறை கட்டுப்பாட்டிற்கு கொடுப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் டேன்டீ தொழிலாளர்கள் இடம் மாறுதல் அல்லது விருப்ப ஒய்வு பெற அறிவிப்பு வெளியிட்டு தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகின்றது.
இந்த மத்திய மாநில அரசுகளின் கொள்கை முடிவுக்கு தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நிர்வாக ரீதியாக போராடியும் எந்த பயனும் இல்லை என கூறுகின்றனர்.கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் வால்பாறை தேயிலைத் தோட்டங்களை புலிகள் காப்பகத்திற்கு கொடுக்க திட்டமிட்டு,வால்பாறையை சுற்றுலா தளமாகும் முயற்சியில் ஈடுபட்டதாகவும்,தற்போது தமிழக அரசு புதிதாக டேன்டீ தேயிலைத் தோட்டத்தை புலிகள் காப்பகமாக மாற்றி வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொடுப்பதாகவும் தகவலை அப்பகுதி மக்களிடம் பரப்பி வருவதாக தனது மனுவில் டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி/எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் தலித் ஜெயராஜ் மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திட மனித உரிமைகள் ஆணையமும்,தமிழக முதல்வரும் தக்க நடவடிக்கை எடுத்து டேன்டீ தொழிலாளர்கள் குடும்பத்தை காத்திட வேண்டும் என தலித் ஜெயராஜ் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.