மதுவுக்கு அடிமையாகி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை,
மதுவுக்கு அடிமையாகி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை,
கோவை நவம்பர் 22-
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சோந்தவா் ஆறுமுகம் (55). இவரை மதுப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை போதை மீட்பு மையத்தில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் தகராறு செய்து வந்ததால் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதிகாலையில் சிகிச்சை அளிப்பதற்காக ஆறுமுகத்தின் அறைக்கு செவிலியா் சென்றுள்ளாா். அப்போது, ஆறுமுகம் அறையில் காணவில்லை. இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் தேடியபோது மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.