*ஆக்கிரமிப்பு அகற்றியதால் வீடு இழந்த குடும்பங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு*
*ஆக்கிரமிப்பு அகற்றியதால் வீடு இழந்த குடும்பங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு*
சிதம்பரம் நவம்பர் 26
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியம் அவர்களிடம் கோரிக்கை அளித்ததன் அடிப்படையில் சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் இன்று சிதம்பரம் நான் முனிசிபல் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் சிதம்பரம் நான் முனிசிபல் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல், சர்வேயர் சிந்துஜா குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளர் சுப்பிரியா, மாவட்ட கழக இணை செயலாளர் மா.ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த் ஆகியோர் உடனிருந்தனர்.