பெயர் தெரியாத புதிய வகை ஆரஞ்சு பவுடர் போதை பொருள் விற்பனை அசாம் மை 2 பேர் கைது.
பெயர் தெரியாத புதிய வகை ஆரஞ்சு பவுடர் போதை பொருள் விற்பனை அசாம் மை 2 பேர் கைது.
கோவை நவம்பர் 28-
கோவையில் போதைப் பொருள் வைத்திருந்த அசாம் தொழிலாளர் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த முத்திபாளையத்தில், போதைப் பொருள் விற்பனை நடப்பதாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்.ஐ., ராமேஷ்கண்ணா அடங்கிய சிறப்பு படையினர், சோதனை நடத்தினர்.அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் சோதனை செய்ததில், புதிய வகை போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.அசாம் மாநிலத்தை சேர்ந்த அஸ்ருல் இஸ்லாம், 22, அப்துல் முத்தலிப், 37, ஆகிய இருவரும் முத்திபாளையத்தில் தங்கி பாக்கு உரிக்கும் தொழில் செய்து வந்தனர்.
அசாம் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை, கோவை கொண்டு வுந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து நேற்று சிறையில் அடைத்தனர். 300 மி.கி., எடையுள்ள, 8 சிறிய டப்பாவில் அடைக்கப்பட்டிருந்த, ஆரஞ்சு நிற போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுரக போதைபோலீசார் கூறுகையில், ‘இருவரும், அடிக்கடி அசாம் மாநிலம் சென்று வந்துள்ளனர். அங்கிருந்து, ஆரஞ்சு நிற போதை பவுடரை கொண்டு வந்து, 50 மி.கி., டப்பாவில் அடைத்து, 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
புதுரக போதைப்பொருள் என்பதால் பெயர் தெரியவில்லை. மூலக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளோம்’ என்றனர்.