டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 புதிய கருப்பு நிறத்தில் தமிழ்நாட்டில் அறிமுகம்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 புதிய கருப்பு நிறத்தில் கோவையில் அறிமுகம்
டி வி எஸ் மோட்டார் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகளாவிய வாகனத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் டி.வி.எஸ் அப்பாச்சி 160 சீரிஸ் மோட்டார் சைக்கிள்களின் புத்தம் புதிய கருப்பு நிறத்திலான ‘ஏ ப்ளேஸ் ஆஃப் பிளாக் டார்க்’ எடிஷன் இருசக்கர வாகனத்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவின் வணிகத் தலைவர் விமல் சும்பலி மற்றும் டிவிஎஸ் விற்பனை மேலாளர் பாண்டே கூறியதாவது :-
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பந்தயப் பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி வரிசை இருசக்கர வாகனங்கள். 5.5 மில்லியனுக்கும் அதிகமான இருசக்கர வாகன ஆர்வலர்களைக் கொண்டிருக்கும் உலகளாவிய ஒரு மாபெரும் சமூகமாக உருவாகியுள்ளது. மேலும் உலகளவில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பரீமியம் மோட்டார் சைக்கிள் ப்ராண்ட்களில் ஒன்றாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சியின் அபாரமான தொடர் செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில், டிவிஎஸ் அப்பாச்சி சீரியஸ் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு மிகச்சரியான சான்றாக திகழ்கிறது. இப்போது, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 வரிசையானது கம்பீரமான தோற்றத்தின் உத்வேகத்துடன் பார்த்த நொடியில் கவனத்தை ஈர்க்கும் புத்தம் புதிய பிளாக் எடிஷனுடன் களமிறங்கி உள்ளது என்றார்.
Apache RTR 160 மற்றும் RTR 160 4V என்று இவ்வாகனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாகனமானது கம்பீரத்துடன் அழகியலான தோற்றத்தை அளிக்கும் பளபளப்பான கருப்பு நிறம் பெற்று முற்றிலும் புதிய அவதாரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மற்ற இருசக்கர வாகனங்களிலிருந்து தனித்து தெரியும் வகையில் உள்ளது.
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த 160 ஆயில் கூல்ட் மோட்டார்சைக்கிள் ஆக திகழ்கிறது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் மூன்று சவாரி முறைகள் டிஜிட்டல் எல்சிடி கிளஸ்டர், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களுடன் உள்ளது. ஸ்போர்ட் அனுபவத்தை அளிக்கும் வேகமான பயணத்திற்கும் நகர்ப்புற பரபரப்பான பயணத்திற்கும் மழை நேர பாதுகாப்பான பயணத்திற்கும் ஏற்ற வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார்.