மனித உரிமைகள் தினத்தை போற்றும் விதமாக கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுவன் தொடர்ந்து ஐந்தேகால் மணி நேரம் ரிப்பன் சிலம்பம் சுற்றி சாதனை….
மனித உரிமைகள் தினத்தை போற்றும் விதமாக கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுவன் தொடர்ந்து ஐந்தேகால் மணி நேரம் ரிப்பன் சிலம்பம் சுற்றி சாதனை….
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் தன்விக்..நான்கு வயதான தன்விக் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.பயின்று வருகிறார்.குழந்தை பருவம் முதலே சிலம்பம் சுற்றுவதல் ஆர்வமுடைய தன்விக், வீட்டின் அருகில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சிலம்பம் பயின்று வருகிறார்.இந்நிலையில் இவரது ஆர்வத்தை கண்காணித்த இவரது பயிற்சியாளர் பிரகாஷ்,தன்விக்கிற்கு அளித்த பயிற்சியின் வாயிலாக சிறுவன் தொடர்ந்து ஐந்தேகால் மணி நேரம் ரிப்பன் கட்டி அலங்கரித்த சிலம்பத்தை சுற்றி சாதனை படைத்துள்ளார். சின்னவேடம்பட டி ப்ளாக் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில்,நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சாதனை சிறுவன் தன்விக்கிற்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.. சிறுவனின் பெற்றோர் கூறுகையில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகளை மேம்படுத்தும் வகையில் இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக தெரிவித்தனர்…