2026 ல் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி
2026 ல் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி
கோவை,செப்.16-
சாதாரண மக்களும் அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரலாம் என்ற நிலையை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா என்று பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபிறகு எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர் கட்சி கொறடாவுமான எஸ்பி. வேலுமணி தலைமையிலும், கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் அம்மன் கே அர்ச்சுணன் எம்.எல்.ஏ மற்றும் கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையிலும் கோவை இதய தெய்வம் மாளிகையிலிருந்து
கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் புரட்சி தலைவர் எம்ஜிஆர், மற்றும் புரட்சிதலைவி அம்மா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் மக்கள் விரோத தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமைய அயராது உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார்.அதை தொடர்ந்து இதய தெய்வம் மாளிகையில் கழக கொடியேற்றி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர் கட்சி கொறடாவுமான எஸ்பி. வேலுமணி மலர்தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கழகம் சார்பில் கொண்டாடபட்டு வருகிறது.
பேரிறிஞர் அண்ணா சாதாரண மக்களும் அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரலாம் என்ற நிலையை உருவாக்கினார். மேலும் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை தந்தவர் முன்னாள் முதல்வர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்.ஆனால் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட எந்த திட்டமும் விடியா திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேறவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் ஏதும் நிறைவேற்றப்படுவதில்லை. நமது அண்டை மாநிலத்தில் ஓணம் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.நமது கோவையிலும் கேரளா மாநில மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைப்போம்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம் எல் ஏ, கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம் எல் ஏ,கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செ.ம.வேலுசாமி மற்றும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சிங்கை சந்துரு, சண்முகவடிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பணி மாவட்ட செயலாளர்கள், பகுதி கழக, வட்டக் கழக செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.