சட்டம் அனைவருக்கும் சமம் பீம்ராவ் சட்ட உதவி மையம் கோவையில் துவக்கம்- உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் பங்கேற்பு
சட்டம் அனைவருக்கும் சமம் பீம்ராவ் சட்ட உதவி மையம் கோவையில் துவக்கம்- உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் பங்கேற்பு
கோவை அக் 7,
கோவையில் பீம்ராவ் சட்ட உதவி ஆலோசனை மையம் துவக்க விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், மதுரைக்கு அருகில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொற்கை என்ற கிராமத்தில் சிட்கோ அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள் இருவர் வழக்கு பதிவு செய்ததில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இது தரிசு நிலம் தான் என கூறியதாகவும், நானே நேரில் சென்று பார்த்ததாகவும் அங்கு ஒரு கிமீக்கு கரை இருப்பதாகவும் அது குளம் தான் எனவும் ஆனால் மாவட்ட ஆட்சியர் எதுவும் இல்லை என பொய்யாக கூறியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் குளம், ஏரி, கண்மாய் என்று ஒன்று இருந்தால் அதன் தன்மையை மாற்ற கூடாது என தீர்ப்பளித்து உள்ளதாக தெரிவித்தார்.
விழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியம் எனவும் அதனோடு உறுதியாக நிற்பதற்கு வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும் என்றார். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சர்டிபிகேட் வேண்டுமென்றால் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் அரசு அதிகாரிகளே வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து சர்டிபிகேட் தர வேண்டுமென சொந்த அனுபவத்தில் தீர்ப்பு வழங்கி இருப்பதாக கூறினார். இது போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும் எனவும் வினவினார்.
இது போன்றவற்றை மக்களிடம் வழக்கறிஞர்கள் கூற வேண்டுமெனவும் இது போன்றவற்றில் மக்களுக்காக வழக்கு தொடரவும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
பீம்ராவ் சட்ட இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ் பேசுகையில்
இந்த சட்ட உதவி மையத்தின் நோக்கம் என்னவென்றால் விளிம்பு நிலை மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு ஜஸ்டிஸ் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்ட இலவச ஆலோசனை மையமாகவும் நடத்த வேண்டும் என்பதுதான் நோக்கம் என தெரிவித்தார். சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு பள்ளி குழந்தைகள் பெண்கள் மாற்றுத்திறனாளிகளை வைத்துள்ள பெற்றோர்கள் ஆகியோருக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பதற்காக தான் இதனை துவக்கியுள்ளதாக தெரிவித்தார்.
பெண்ணுரிமை நிலை நாட்டுதல் குழந்தைகளின் பாதுகாப்பு சாதி சார்ந்த விஷயங்களை வேறருத்தல் போன்றவற்றை மேற்கொள்ள துவங்கியிருப்பதாக தெரிவித்தார். மாநில மற்றும் மத்திய அரசிடம் சட்ட உதவி மையங்கள் இருப்பதாகவும் ஆனால் அங்கு அதிகமானோர் நீண்ட நேரம் காத்திருந்து தவறான புகார்களை அழைப்பதாக தெரிவித்தார். எனவே அரசின் சட்ட உதவிகளை சுலபடுத்த வேண்டும் என்றால் போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும் என கூறினார்.
இல்லாத பட்டவர்களுக்கு வக்கீல்கள் மூலமாக உதவி செய்கிறோம், மக்களை தயார்படுத்தி சட்ட உதவி மையங்களை அணுகுவதற்கு உதவி புரிகிறோம என தெரிவித்தார்.