மெர்சிடிஸ் பென்ஸ் தனது இரண்டாவது ‘மேட் இன் இந்தியா’ BEV ஐ அறிமுகப்படுத்துகிறது: EQS SUV 580 4MATIC
மெர்சிடிஸ் பென்ஸ் தனது இரண்டாவது ‘மேட் இன் இந்தியா’ BEV ஐ அறிமுகப்படுத்துகிறது: EQS SUV 580 4MATIC
சென்னை செப் 17,
இந்தியாவின் மிகவும் பிடித்தமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இன்று இந்திய சொகுசு கார் சந்தையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மூன்று-புள்ளி நட்சத்திரத்துடன் நிறுவனம் ஃப்யூச்சரிஸ்டிக் மற்றும் ப்ரோக்ரஸிவ் SUV ஃப்ரபோஷனுடன் சொகுசு வசதியும் மற்றும் தொழில்நுட்பத்தையும் கொண்ட உலகத் தரம் வாய்ந்த BEV ஐ அதாவது EQS SUV 580 4MATIC காரை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் தனது BEV போர்ட்ஃபோலியோவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது:
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் செயல்பாட்டுத் தலைவருமான வியங்கடேஷ் குல்கர்னி கூறுகையில், “புனேவில் உள்ள எங்கள் தயாரிப்பு ஆலையிலிருந்து இரண்டாவது உலகத் தரம் வாய்ந்த BEV -ஐ உள்ளூரிலேயே தயாரிப்பது, எங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் அர்ப்பணிப்புள்ள குழுவுக்கு மிகவும் பெருமையான தருணம். இந்த வெற்றி நமது முக்கிய தொழில்நுட்பத் திறன்கள், உற்பத்தியில் நெகிழ்வுத்தன்மை, நமது தொழிற்சாலையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகள் மற்றும் எதிர்காலத்திற்கான நமது அருமையான குழு ஆகியவற்றை காட்டுகிறது. எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு மாறும்போது ஏற்படக்கூடிய எதிர்கால வாகனங்களின் தயாரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, டிஜிட்டல்மயமாக்கலை ஷாப் ஃப்ளோரின் முன்னணியில் கொண்டு வர ஹை-வோல்டேஜ் தொழில்நுட்ப அறிவு மற்றும் தீவிரமான தரவு சார்ந்த உத்திகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், எங்கள் மக்கள்தான் எங்கள் கண்டுபிடிப்பு மற்றும் வெற்றிக்கு காரணமாகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இந்த சாதனை தரத்தில் நமது உலகளாவிய தரநிலை நடைமுறைகள் மற்றும் நமது தயாரிப்புகள், ஆலை மற்றும் விநியோகச் சங்கிலி முழுவதும் நிலைத்தன்மையில் அசைக்க முடியாத கவனம் செலுத்துவதை எடுத்துக் காட்டுகிறது,. இது பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட எங்கள் தயாரிப்பு வலிமையையும், EQS SUV 580 போன்ற உயர்தரமான, அதிநவீன BEV-களை உருவாக்குவதில் உள்ள சிக்கலான அசம்ளி ப்ராசஸ்களில் எங்களின் சிறப்புத்திறனை காட்டுகிறது என கூறினார்.