இந்தியாவில் Retail.NEXT ஷோரூம்களை அறிமுகம் செய்யும் BMW குரூப்.
இந்தியாவில் Retail.NEXT ஷோரூம்களை அறிமுகம் செய்யும் BMW குரூப்.
சென்னை செப் 17,
இந்தியாவில் Retail.NEXT டீலர்ஷிப்களை அறிமுகம் செய்வதை BMW குரூப் இந்தியா அறிவிக்கிறது. நவீன தேவைகளை பூர்த்தி செய்யவும் நேர்த்தியான சேவைகளை வழங்கவும் பிரத்யேகமாக மறுஉருவாக்கம் செய்யப்பட்ட சேவைகள் மற்றும் வசதி நிலைகளை Retail.NEXT கொண்டிருக்கும். அடுத்த 36 மாதங்களில் 33 நகரங்களில் 56 ஃபெசிலிட்டிகளில் Retail.NEXT கருத்தாக்கம் செயல்படுத்தப்படும்.BMW குரூப் இந்தியாவின் பிரசிடெண்ட் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. விக்ரம் பாவா கூறியதாவது: “BMW குரூப் இந்தியாவில் லக்ஜரி அனுபவத்தை மறுவரையறை செய்வதன் வழியாக நடப்பு நிலையை நாங்கள் மாற்றியமைக்கிற Retail.NEXT அறிமுகத்தின் மூலம் வெறுமனே அனுபவங்களை மட்டும் உயர்த்தவில்லை; அவைகளை நிலைமாற்றத்திற்கு உட்படுத்துகிறோம். BMW டீலர்ஷிப்பிற்கு செய்யும் ஒவ்வொரு வருகையும் தனித்துவமான உலகிற்கு நுழைவதையும் விட அதிகமானது; நவீனம், முன்னேற்றம் மற்றும் உண்மையான லக்ஜரி ஆகிய அனைத்தும் மிக நேர்த்தியாக ஒருங்கிணையும் ஒரு அமைவிடத்திற்குள் புகுவது இது. ‘பிஜிட்டல்’ புத்தாக்கங்களை ஒருங்கிணைப்பதன் வழியாக வாடிக்கையாளரோடு கலந்துரையாடல் செயல்படுவதை புரட்சிகரமாக மாற்றுவதற்கென Retail.NEXT டீலர்ஷிப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகியல் ரீதியாக கண்களை கவர்வதோடு முற்போக்கான சிந்தனையை வெளிப்படுத்துகிற சூழலில் டிஜிட்டலை ஃபிஸிக்கல் சந்தித்து சங்கமிக்கும் இடம் இது. இந்தியாவில் சிறப்பான லக்ஜரி அனுபவம் என்ற எமது தொலைநோக்குப் பார்வையை நாங்கள் விரிவாக்குகின்ற போது நாடெங்கிலும் அதன் செயல்பாட்டின் தொடக்கத்தை இந்த முன்னெடுப்பு குறிக்கிறது. BMW குரூப் மீது தளராத அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கின்ற மற்றும் இந்தியாவில் Retail.NEXT – ஐ அமல்படுத்த 3 ஆண்டுகள் காலஅளவில் செய்யப்படுகின்ற கணிசமான முதலீட்டிற்காக எமது டீலர் பார்ட்னர்களை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.”
‘சென்ட்ரல் கஸ்டமர் வாக்வே’ – ஐ ஒட்டி மையப் பகுதியில் வருகையாளர்களையும், வாகனங்களையும் Retail.NEXT வைக்கிறது. ‘ஒன் ஃபுளோர்’ மற்றும் ‘ஒன் சீலிங்’ என்ற கருத்தாக்கம் பிசினஸ் பகுதிகளுக்கிடையே எந்த பிரித்தலுமின்றி, ஒரே தள பகுதியில் BMW, MINI, மற்றும் BMW மோட்டராடு, சேல்ஸ் மற்றும் சர்வீஸ், புதிய மற்றும் BMW ப்ரீமியம் செலக்ஷன் (BPS)- ப்ரீ – ஓன்டு கார்ஸ் என அனைத்தையும் இடம்பெறச் செய்கிறது. சேல்ஸ் மற்றும் சர்வீஸிற்கு பிரத்யேகமான சிங்கிள் என்ட்ரி வசதியானது, தெளிவான நுழைவு வழியை உறுதி செய்கிறது மற்றும் வருகையாளர்கள் அவர்களது சேல்ஸ் மற்றும் சர்வீஸ் தேவைகளுக்கு தீர்வுகாண டீலர்ஷிப்பில் எளிதாக சென்று வருவதை இது மேலும் எளிதாக்குகிறது.