பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது
சென்னை செப் 18,
நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (முன்னர் மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என அறியப்பட்டது) (“நிவா பூபா“) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) ஆகியவை இணைந்து பிரதிஷ்தா என்ற சிஎஸ்ஆர் முன்முயற்சியில் பங்கேற்கின்றன. நம் நாட்டின் சமூகத்தில் அடிநிலையிலுள்ள முதியோர்களுக்கு இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, முதியோர்களின் நலனுக்காக 2023ஆம் ஆண்டில் மகாராஷ்டிர அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருது பெற்ற தொண்டு அறக்கட்டளையான சுனந்தா அறக்கட்டளை நடத்தும் முதியோர் தங்குமிடங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு 48,600 உணவுகள் வழங்கப்படும்
கடந்த வாரம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், ஐஓபி-இன் எம்டி மற்றும் சிஇஓ அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா அவர்கள், நிவா பூபாவின் பாங்க்ஸ்யூரன்ஸ் இயக்குநர் மற்றும் தலைவர் அசீம் குப்தா அவர்கள் ஆகியோர் சுனந்தா அறக்கட்டளைக்கு டோக்கன் காசோலையை வழங்கினர். [சமீபத்திய பங்களிப்பின் அடிப்படையில், மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள ராதிகா முதியோர் இல்லத்தில் வசிக்கும் 125க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு 48,600க்கும் மேற்பட்ட உணவுகள் ஸ்பான்சர் செய்யப்படும். மார்ச்சு மாதத்தில், அதே குழுவிற்கு 33,000 உணவுகளுக்கு நிதியுதவி செய்ய நிவா பூபா மற்றும் ஐஓபி ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்தன. சுனந்தா அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் ராதிகா ஓல்டு ஏஜ் முதியோர்கள் நன்கு பராமரிக்கப்படுவதை இத்தொடர்ச்சியான ஆதரவு உறுதி செய்யும். பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. சமூகப் பொறுப்புணர்வை நோக்கிய இரு கூட்டாளர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இது எதிரொலிக்கிறது, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய, இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்க பங்களிக்க மற்றவர்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. இந்த கூட்டாண்மை மூலம், நிவா பூபா & இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வில் உறுதியான, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன