பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பேங்கிங்யை கற்பிக்கும் எச்டிஎஃப்சி வங்கி
11,000 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் எச்டிஎஃப்சி வங்கி கற்பித்துள்ளது
சென்னை செப் 18,
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, 11,000 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் நடைமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 150க்கும் மேற்பட்ட பயிலரங்குகளை நடத்தியது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த 150 சிறப்பு பாதுகாப்பான பேங்கிங் பயிலரங்குகளை செப் 4 முதல் செப் 10ஆம் தேதிகளில் நடத்தியது
வங்கியானது இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளி/கல்லூரி/கல்வி நிறுவனங்களை சென்றடைந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பான பேங்கிங் அமர்வுகளை நடத்தியது. இந்த ஆக்கபூர்வ அமர்வுகள் மூலம் பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான பேங்கிங் நடைமுறைகள் குறித்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பெற்றனர் எனவே இணைய மோசடிகளுக்கு அவரகள் ஆளாக மாட்டார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த எச்டிஎஃப்சி வங்கியின் மூத்த செயல் துணைத் தலைவர் – கிரெடிட் இன்டெலிஜென்ஸ் மற்றும் கண்ட்ரோல் திரு. மணீஷ் அகர்வால், கூறுகையில், “இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் உலகில் பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவை இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நாம் அளிப்பது இன்றியமையாதது. விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் இணைய மோசடிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, ரகசிய வங்கித் தரவைப் பகிரவோ அல்லது சரிபார்க்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்யவோ கூடாது என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமானது. இந்த பயிலரங்குகளின் நோக்கம், மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் ஒருவர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் குறித்தும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மேலும் கல்வி கற்பதற்கும், அவர்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் பயிற்சி அளிப்பதாகும்.”