பஹ்ரைனில் USD 16.2 மில்லியன் முதலீட்டை அறிவித்தது செமிகண்டக்டர்-சிப்-உற்பத்தியாளர் பாலிமாடெக்.
பஹ்ரைனில் USD 16.2 மில்லியன் முதலீட்டை அறிவித்தது செமிகண்டக்டர்-சிப்-உற்பத்தியாளர் பாலிமாடெக்.
சென்னை செப் 14,
பஹ்ரைன் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (பஹ்ரைன் EDB) ஆனது பல துறைகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களிடமிருந்து 33 மில்லியன் டாலர்கள் (INR 268 கோடிக்கு மேல்) மதிப்புள்ள முதலீட்டுகளைப் பெற்றுள்ளது. அதில், முதன்மையான முதலீட்டு நிறுவனமாக பாலிமாடெக் ( Polymatech ) இடம்பெற்றுள்ளது. ஏனெனில், இந்நிறுவனமானது அதிகப்படியாக 16 மில்லியன் அமெரிக்க டாலரை தொழில்துறை பகுதியான Hidd-ல் செமிகண்டக்டர் உற்பத்திக்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.பஹ்ரைன் ஈடிபியின் தலைமை நிர்வாகி மற்றும் நிலையான வளர்ச்சித் துறை அமைச்சர் எச்.இ. நூர் பின்த் அலி அல்குலைஃப் பேசுகையில், “ பஹ்ரைன் ஈடிபி சார்பாக பாலிமா டெக் உள்ளிட்ட பல்துறை நிறுவனங்களை முதலீடு செய்ய பஹ்ரைனுக்கு வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள், மேம்பட்ட உற்பத்தி மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதோடு, எதிர்காலத்துக்கு தேவையான சுற்றுச்சூழலை வளர்ப்பது, டிஜிட்டல்-முதல், அறிவார்ந்த பொருளாதாரத்தை வளர்ப்பது போன்றவற்றில் பஹ்ரைன் தொடர்ந்து வேகத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. குறிப்பாக, பஹ்ரைனில் செமிகண்டக்டர் உற்பத்தி அலையை நிறுவும் பாலிமாடெக் டிஜிட்டல் மாற்றத்தின் இந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். அதோடு, புதுமை மற்றும் துறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்க உள்ளது” என்றார்.