குழந்தை தொழிலாளி மீட்பு கோவை கலெக்டர் அதிரடி,
குழந்தை தொழிலாளி மீட்பு கலெக்டர் அதிரடி, வேலைக்கு வைத்திருந்த பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை.
கோவை டிசம்பர் 5-
குழந்தை தொழிலாளியை வேலைக்கு அமர்த்திய பேக்கரி உரிமையாளர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சுந்தராபுரத்தில் செயல்படும் பேக்கரியில், குழந்தை தொழிலாளி வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, தேசிய குழந்தை தொழில் முறை ஒழிப்புத்திட்ட இயக்குனர் விஜயகுமாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி, சுந்தராபுரம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் சாரதா மில் ரோட்டில் செயல்படும், ஸ்ரீ மகாலஷ்மி பேக்கரி மற்றும் பழமுதிர் நிலையத்தில், சிறுவன் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுவனை மீட்ட அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் வயது பரிசோதனை மேற்கொண்டனர். இதில் சிறுவனுக்கு 14 முதல் 15 வயது இருக்கும் என்று தெரியவந்தது. சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரிகள், வேலைக்கு அமர்த்திய பேக்கரி உரிமையாளர்
செல்வராஜ், 42, என்பவர் மீது போலீசில் புகார் அளித்தனர். போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.