கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

Spread the love

கோவையில் அஇஅதிமுக சார்பில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து எஸ்பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

கோவை அக் 8,

“விடியலை தருகிறேன் என்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருக்கிறார்” – கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அம்மன் அர்ஜுனன் MLA விமர்சனம்

 

கோவை

 

கோவையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சொத்து வரி,மின்கட்டண உயர்வை கண்டித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அஇஅதிமுக கட்சியின் அமைப்புகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்றார் ,அதன் படி கோவை தொண்டாமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி,தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், பெண்கள், தொண்டர்கள், கையில் பதாகைகள் ஏந்தி மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்து எஸ்பி வேலுமணி கோஷம் எழுப்பினார், இதனை தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி முழுக்கமிட்டனர், இதே போன்று வடவள்ளியில் எம்எல்ஏ அருண் குமார் தலைமையில் கட்சியினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர், மாநகராட்சி அருகே எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தலைமையில் கட்சியினர் விடியலை தருகிறேன் என்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருக்கிறார் என மனித சங்கிலி போராட்டத்தில் அம்மன் அர்ஜுனன் MLA விமர்சனம் செய்தார்,

 

போராட்டத்தின் போது, வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி, ஐந் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

போராட்டத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வேலுமணி கூறுகையில், விடியலை தருகிறேன் என்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருப்பதாகவும் இந்த ஐந்து ஆண்டுகள் எப்போது முடியும், என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் அதிமுக ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர் என கூறினார். அதிமுக ஆட்சி ஏழை எளிய மக்களுக்காகவே நடத்தப்பட்டது என்றும் ஆனால் திமுக ஆட்சியில் பணக்காரர்கள் கூட வாழ முடியாது கூட வாழ முடியாத சூழல் உள்ளது என கூறினார். சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு செல்வதாகவும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையில், தற்போது பஞ்சாலைகளை மூடி வருவது வருத்தம் அளிக்கிறது, இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து வாடுகின்றனர் , அடுத்த தலைமுறையினருக்கு பஞ்சாலை உபகரணங்களை கண்காட்சியில் வைத்து தான் காட்ட வேண்டிய சூழல் கோவைக்கு வந்திருப்பதாகவும் கூறினார். 2026 ஆம் ஆண்டு யார் தடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மலரும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவைக்கு வந்த அபுதாபி விமானத்தில் கடத்திய 1.5 லட்சம் வெளி நாட்டு சிகரெட் பறிமுதல்
Next post முதுமலை வனக்கிராம மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, போலீஸில் புகார்