சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன்.
சமூகநீதி நாளில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய- 66-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் முனியம்மாள் பாலமுருகன்.
கோவை செப் 18,
தந்தை பெரியார் 146 வது பிறந்த நாளான சமூகதீதி நாளில் கோவை மாநகராட்சி 66 வது வார்டு திமுக கவுன்சிலர் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாள் தமிழகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாளை திமுக தலைமை வருட வருடம் முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி இராமநாதபுரம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 66 வது வட்டத்தில் வட்ட கழக செயலாளர் பாலமுருகன் (எ) நவீன் முருகன் தலைமையில் புலியகுளம் பகுதி அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 66-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் பாலமுருகன் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தி கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் வார்டு செயலாளர் பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதி மொழி எற்க்கப்பட்டது.
அப்போது பகுதி கழக செயலாளர் பசுபதி,வட்ட கழக பிரதிநிதிகள் குழந்தை சாமி,விவேக், சங்கர்,குகன், முகேஷ், விமல் சிறுபான்மையினர் அமைப்பாளர் தேவசீலன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லாரா, மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் மயில்சாமி, பகுதி கழக பொருளார்.செந்தில், பகுதி கழக அவைத் தலைவர் சந்திரன்.பகுதிகழக மாணவரணி அமைப்பாளர் பகலவன், பகுதி கழக இளைஞர் அணி அமைப்பாளர் கௌசிக், பகுதி கழக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் செலின்மேரி, மீனவர் அணி பாலன்குட்டி, மற்றும் மகளிர் அணி சார்ந்த புஷ்பராணி,தெய்வநாயகி, இளமதி,கண்ண்ம்மா,சித்ரா, கண்ண்ம்மா, அல்போன்ஸ்,அருணா தேவி,நிர்மலா,ரூபா, லட்சுமி,அனைத்து அணியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மகளிர் அணி நிர்வாகிகள், தோழமை கட்சிகள், கழக உடன் பிறப்புகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.