குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வந்த நிலையில் அதில் பெரும்பாலானோருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் வாசிக்கும் 36 குடும்பங்களுக்கு மட்டும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கவில்லை என்றும் அவர்களை காலி செய்வதற்காக மின் இணைப்பை துண்டித்து விட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து குடிசை மாற்று வாரியம் அதிகாரியிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியரை சந்திக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தால் குடிசை மாற்று வாரியம் அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என இருவரும் மாறி மாறி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்பொழுது இடிந்த வீட்டில் தங்கி வருவதாகவும் உடனடியாக குடிசை மாற்று வாரியத்தில் 36 குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் இருந்து மனு அளித்தனர்.
வீடு மற்றும் மின் இணைப்பு இல்லாமல் குழந்தைகள் படித்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் தினசரி கூலி வேலைக்கு செல்வதனால் வாடகை வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒத்துக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.