தனியார் கல்லூரி கட்டிட அனுமதியில் குளறுபடி விதிமுறலை ரத்து செய்ய கோவை கலெக்டரிடம் மனு
கோவை,திருமலையம்பாளையம் பேரூராட்சி கட்டிட அனுமதியில் குளறுபடி,உள்ளூர் திட்ட குழுமம் விதிமீறல்- ரத்து செய்ய சமூக ஆர்வலர் மனு
கோவை அக் 7,
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் உள்ள . திருமலையம்பாளையம் பேரூராட்சியில் வீடுகள், கடைகள், வணிக வளாகம் கட்டிடம் கட்ட வரைய அனுமதியில் உள்ளூர் திட்ட குழும்மத்துடன் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என பேரூராட்சி இரண்டாவது வார்டு உறுப்பினரான ரமேஷ் குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார், இதில் அவர் கூறியதாவது நான் வழக்குரைஞராகவும், திருமலையம்பாளையம் பேரூராட்சியின் 2வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினராகவும் இருக்கிறேன்
திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேரு காலேஜ் ஆப் எஜுகேஷன் & சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தி வரும் நேரு ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் மற்றும் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி , தனியார் சுயநிதி கல்லூரிகள் 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துவரி செலுத்தாமல் நிலுவை தொகை வைத்து உள்ளனர் , இதே கல்வி குழுமம் நேரு இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில் கடந்த 2016-17 ஆண்டில், 41,004 ச.மீ பரப்பளவில் தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளம் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விதிகளை மீறி கூடுதலாக கட்டிடங்களை அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக சுயநிதி பள்ளியை நடத்தி வருகிறது.
இந்த தனியார் சுயநிதி பள்ளிக்கு கடந்த 7ஆண்டுகளாக சொத்துவரி விதிப்பு செய்யாமலும் வரி செலுத்தாமலும் உள்ள நிலையில் தற்போது இப்பள்ளிக்கு கூடுதலாக மூன்றாம்தளம் மற்றும் நான்காம் தளம் 69200 ச.மீ பரப்பளவில் அமைக்க இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழும்மத்திடம் செயல்முறை ஆணை SWP/BPA249429/2024, நாள் 06.06.2024 மற்றும் ம.வ/கோ.உதி.கு.எண்.372/2024, திட்ட அனுமதி எண்.590/2024 மூலம் இணைய வழி ஒப்புதல் வழங்கியிருப்பது முற்றிலும் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு மற்றும் விதிமீறல் ஆகும்.
ஆதலால் விதிகளை மீறி கட்டிடங்களை அமைத்துள்ள தனியார் சுயநிதி பள்ளி 2016-17இல் 41,004 ச.மீ பரப்பளவில் ஏற்கனவே கட்டியுள்ள தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளம் ஆகியவற்றை ஆய்வுசெய்து வரிவிதிப்புக்கு உட்படுத்தி, 7ஆண்டுகளுக்கான உரிய சொத்து வரியை செலுத்தும் வரை மூன்றாம்தளம் மற்றும் நான்காம்தளம் 69200ச.மீ. பரப்பளவில் அமைக்க உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய இணைய வழி ஒப்புதல் ம.வ./கோ.உதி.கு.எண்.372/2024, திட்ட அனுமதி எண்.590/2024 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய தாங்கள் ஆவண செய்ய வேண்டும் என புகார் மனு அளித்ததாக தெரிவித்தார்,திருமலையம் பாளையம் பேரூராட்சியில் இது போன்று பல்வேறு கட்டிட வரை பட அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும் அதனையும் கண்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறார்