மூன்றுநாள் கல்வி சுற்றுலாவிற்க்கு விமானத்தில் பறந்த 43 அரசு பள்ளி மாணவர்கள்…

Spread the love

மூன்றுநாள் கல்வி சுற்றுலாவிற்க்கு விமானத்தில் பறந்த 43 அரசு பள்ளி மாணவர்கள்…

 

 

கோயமுத்தூர் ரோட்டரி மோனார்க்ஸ் சார்பில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் கோவில்பாளையம் அருகே கோட்டைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 39 பேர் மற்றும் சின்ன மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகள் நான்கு பேர் என 43 பேர் பெங்களூருக்கு மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இதில் பெங்களூரு அறிவியல் கண்காட்சி,உயிரியல் பூங்கா, நேஷனல் ஏரோநாட்டிக் லிமிடெட், உட்பட பெங்களூருவில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களை காண்பித்து விட்டு பெங்களூரில் இருந்து கோவைக்கு விமான மூலம் மாணவ மாணவிகளை அழைத்து வந்தனர் .

 

இதில் அவர்கள் ஆடல் பாடல் உடன் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை கழித்து கல்வி சம்பந்தமாகவும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டனர்.மேலும் மாணவ மாணவிகள் கூறுகையில் எங்களைப் போன்று வசதியற்ற மாணவ மாணவிகள் இதுபோன்று கல்வி சுற்றுலாவுக்கு சென்று மீண்டும் விமானத்தில் பயணிக்கும் போது எங்களது மனம் மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

இதுபோன்று வசதியற்ற மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து ரோட்டரி சங்கம் உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post உதயநிதி ஸ்டாலின் சினிமாவை  காதலிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி
Next post *ஆக்கிரமிப்பு அகற்றியதால் வீடு இழந்த குடும்பங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு*