கோவை மாவட்ட தொழில் பேட்டை சார்பாக 7500 பேருக்கு வேலைவாய்ப்பு
கோவை மாவட்ட தொழில் பேட்டை சார்பாக 7500 பேருக்கு வேலைவாய்ப்பு.
கோவை நவம்பர் 26-
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம் குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி ஆகிய 2 தொழிற்பேட்டைகளில் 99 மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் மற்றும் 271 தொழிற்கூடங்கள் உள்ளன. காளப்பட்டியில் உள்ள மின்னணு மற்றும் மின்னணுவியல் தொழிற்பேட்டை தொழில் வணிகத்துறை ஆணையரகத்திடம் இருந்து சிட்கோவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதில் உள்ள 29 தொழிற்கூடங்கள் அனைத்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தொழிற்பேட்டை யில் அடிப்படை உட்கட்ட–மைப்பு வசதி–களான தெருவிளக்கு–கள், சாலைகள், தண்ணீர்வி–நியோகம் மற்றும் வடிகால் வாய்க்கால் ஆகிய வசதிகள் உள்ளன.
குறிச்சி தொழிற்பேட்டையில் தானியங்கி உதிரிபாகங்கள், அச்சு மற்றும் வார்ப்புகள், மோட்டார் மற்றும் பம்பு பாகங்கள், நூற்பு ஆலை பாகங்களும், மலுமிச்சம்பட்டி தொழிற்பேட்டையில் காலணிகள், பிளாஸ்டிக் நீர் தொட்டிகள், பொறியியல் பாகங்கள், பொறியியல் கட்டுமானமும் மற்றும் காளப்பட்டி தொழிற்பேட்டையில் பொது பொறியியல், ஆட்டோ உதிரி பாகங்கள், காலணிகள், ஆடை எந்திர உதிரி பாகங்கள், மாவரைக்கும் எந்திர பாகங்கள் தொடர்பான உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதன் மூலம் சுமார் 5000 ஆண்கள் மற்றும் 2500 பெண்கள் உட்பட மொத்தம் 7500 நபர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு சிட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தனியார் தொழிற்பேட்டைகள் உருவாக்குதல் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் 1345 ஏக்கர் பரப்பளவில் ரூ.6கோடி மதிப்பில் தேயிலை குழுமம், மோப்பிரிப்பாளையத்தில் 27ஏக்கர் பரப்பளவில் ரூ.2432 கோடி மதிப்பில் கொடிசியா தொழில் பூங்கா, பொது உற்பத்தி உட்கட்டமைப்பு வசதி திட்டங்கள் கீழ் சூலூர் வட்டம், அப்பநாயக்கன்பட்டி புதூரில் ரூ.4கோடி மதிப்பில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குழுமம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கள்ளப்பாளையத்தில் 116 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.32 கோடி மதிப்பில் கொடிசியா தொழில் பூங்கா, சொலவம்பாளையத்தில் 4242ஏக்கர் பரப்பளவில் ரூ.18.06 கோடி மதிப்பில் கொசிமா தொழில் பூங்கா, வெள்ளலூரில் ரூ.444கோடி மதிப்பில் வார்ப்பு குழுமம், மதுக்கரையில் ரூ.476கோடி மதிப்பில் பொறியியல் குழுமத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பொது வசதி மையம் குறு மற்றும் சிறு தொழில்கள், குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15.30கோடி மதிப்பில் தங்க நகைக் குழுமம் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், கிட்டாம்பாளையத்தில் 318.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.24,81 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா தொழிற் கூட்டுறவு தொழிற்பேட்டை மற்றும் சின்னவேடம்பட்டியில் ரூ573கோடியில் அலுமினியம் அச்சுவார்ப்பு குழுமம் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.