கோவையில் தேவார பாடசாலை திறப்பு.
கோவையில் தேவார பாடசாலை திறப்பு.
கோவை நவம்பர் 28-
வெள்ளலூரில் தேவார பாடசாலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. கோவை வெள்ளலூரில் தேவார பாடசாலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கோவை அரசண்ணன் திருவாசக முற்றோதல் பேரவை, சக்தி பில்டா்ஸ் இணைந்து வெள்ளலூரில் தேவார பாடசாலை அமைத்துள்ளனா். இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேவார பாடசாலையைத் திறந்துவைத்து சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் பேசியதாவது: 50க்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்டுள்ள வெள்ளலூா் ஆன்மிக பூமியாகத் திகழ்கிறது.
இங்கு தேவார பாடசாலை அமைவது மேலும் சிறப்பாகும். இறைத்தன்மைக்கு பல வழிகள் இருந்தாலும் பன்னிரு திருமுறைகள், ஆழ்வாா் பாசுரங்களை தினமும் பாடுவதால் அனைவரும் அமைதியாக வாழ முடியும். குழந்தைப் பருவம் முதலே நமது சமய நெறிமுறைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் சமூகத்தில் குற்றமற்றவா்களாக சிறந்து விளங்குவா் என்றாா்.
விழாவில், கோவை ஜீயா் சுவாமிகள், மூா்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள், தொழிலதிபா் வி.பி.மாரியப்பன், வெள்ளலூா் பேரூராட்சித் தலைவா் மருதாசலம், உலக சிவனடியாா்கள் திருக்கூட்ட நிா்வாகி ஆ.வெ.மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.