மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு செய்து தண்டனை கோவை கோர்ட் தீர்ப்பு.
மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு செய்து தண்டனை கோவை கோர்ட் தீர்ப்பு.
கோவை,டிசம்பர் 1-
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு தண்டனை கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
சேலம் மாவட்டம், மோரூரை சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், கோவை மாவட்டம், ஆனைமலை பகுதிக்கு, 2019ல், வேலைக்கு சென்றபோது, பிளஸ்2 படித்த மாணவியிடம் காதலிப்பதாக கூறி அழைத்து சென்று, கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்.
ஆனைமலை போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்து, கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு, 10 ஆண்டு சிறை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். குற்றவாளி மணிகண்டன் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது.