அன்னூர் அருகே கஞ்சா விற்ற வட மாநில வாலிபர் கைது.
அன்னூர் அருகே கஞ்சா விற்ற வட மாநில வாலிபர் கைது.
கோவை டிசம்பர் 2-
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கதவுக்கரை அம்மன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து
விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியை சேர்ந்த சஞ்சன் குமார் ராய்(32) என்பதும், சென்னிவீரம்பாளையத்தில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் கஞ்சா விற்பதற்காக அந்த பகுதியில் நின்றிருந்ததும் தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.