மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் – விசிக மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் பேட்டி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் – விசிக மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் பேட்டி
கோவை செப் 17,
கோவை அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து – கோவை மாவட்ட திமுக “இந்திய கூட்டணிக் கட்சிகளின்” சார்பில்,கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திமுக மற்றும் இந்திய கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்டத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பொறுப்பாளர்களுடன் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன்,மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவர் கணபதி ராஜ்குமார் எம்பி.,கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயகுமார், மாவட்ட திமுக இந்திய கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மதிமுக ஆடிட்டர் அர்ஜூன் ராஜ்,கணபதி செல்வராஜ்,ஆர்.ஆர்.மோகன்குமார்,,சி.பி.ஐ.எம். மாவட்டச்செயலாளர் .பத்மநாபன். குணசேகரன், சிவஞானம்,சி.பி.ஐ. ஆறுமுகம்., மாவட்ட செயலாளர் சிவசாமி,த.பெ.தி.க.பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன், கொ.ம.தே.க.கட்சியின் விஜயகுமார், ஆதித் தமிழர் பேரவை ரவிகுமார், திராவிட தமிழர் கட்சி வெண்மணி உட்பட திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் அளித்த பேட்டி:
எழுச்சி தமிழர், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளன் அவர்களின் இன்று கோவையில் அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து இந்திய கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம். தொழில் முனைவோருக்கான ஜிஎஸ்டி குறை தீர் கூட்டம் என வியாபாரிகளை அழைத்து குறைகளை கேட்கும் போது கோவையில் மிக பிரபலமான அன்னபூர்ணா ஓட்டல் நடத்தி வரும் அதன் நிறுவனர் சீனிவாசன் அவர்கள் கொங்கு தமிழில் மிகவும் எதார்த்தமாக பன்னுக்கு வரியில்லை ஆனால் வெண்ணை மற்றும் கீரிம் போன்றவற்றிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என ஆகவே வாடிக்கையாளர்கள் பன்னை தனியாகவும் வெண்ணை,கீரிம் போன்றவற்றை தனியாகவும் தாருங்கள் என கேட்கின்றனர். மேலும் இனிப்புக்கு 5% மற்றும் காரம் வகைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைகின்றனர் என பேசினார். இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் படு வேகமாக பரவியது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் அவரை மிரட்டி மன்னிப்பு கோர வைத்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியது பாஜகவின் எதேச்சை அதிகாரதாதோடு செயலாபட்டு மன்னிப்பு கோர வைத்ததர்க்கும், ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என பேட்டி அளித்தார்.அப்போது உடன் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை சேது,மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் கோவை ராஜா,மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் ஹக்கீம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் தளபதி சபிக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.