தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் , கல்லூரியிடையே கலை இலக்கியப் போட்டியில் பரிசளிப்பு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் , கல்லூரியிடையே கலை இலக்கியப் போட்டியில் பரிசளிப்பு
கோவை அக் 4,
கோவை, அவினாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி
சாணக்யா அரங்கத்தில் .தமிழ் நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது, இதில் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர், ஒவ்வொரு கல்லூரி வாரியாக மொத்தம் பத்து நாட்கள் நடந்த கவிதை, கட்டுரை,நடிப்பு ,பேச்சு போட்டிகளில் தனித்திறமைகளை மாணவ, மாணவிகள் வெளிப்படுத்தினர்,இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசும்,ஆறுதல் பரிசாக இரண்டு நபர்களுக்கும், மெடல், சான்றிதழ், பரிசு கோப்பைகளை வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சிறுபான்மையினர் நலப்பிரிவின் உறுப்பினரும்,பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ,ஹாஜி முகம்மது ரபிக் பரிசுகள் வழங்கி கவுரவித்தார், இதில் பேசியவர் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன் . இந்த வெற்றி மட்டும் போதாது, பெற்றோர்கள், ஆசிரியர்களிடமும் பாராட்டுகள் பெற வேண்டும். போதை கலாச்சாரத்தை ஒழிக்க மாணவ – மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு முதல்வர் போதையை ஒழிக்க பாடுபட்டு வருகின்றார். அவருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும், மனிதன் அழிவதே போதை பொருளால்தான், அதை நாம் தடுக்க வேண்டும். , போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என மாணவ மாணவிகள் உறுதியேற்போம் என்றார், நிகழ்ச்சியின் முன்னதாக கோவை
நளினி வெள்ளியங்காட்டான் சமூக நல அறக்கட்டளை, நா.சித்ரா,நா.ராஜேஸ்வரி,பாவலர் கோமகன் நினைவு அறக்கட்டளை,ஷீலா கோமகன், சீனிவாசன் – பாக்கியம் நினைவு அறக்கட்டளை எஸ்.ஜனார்த்தனன் ,ஏர்டெக் எக்யூப்மெண்ட்ஸ் ஜெ.நஜிமுதீன், இரத்ததான இயக்கம் பெ.மெளனசாமி, மாநில துணைத் தலைவர் கே.சுப்பிரமணியன்,மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் எஸ். பாலச்சந்திரன், முன்னிலை வகித்தனர் , இந்துஸ்தான் கல்லூரி மொழித்துறை தலைவர் முனைவர்.ச.ஆ.காயத்ரி வரவேற்றார், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் கவிஞர் காமு,,மாவட்ட செயலாளர், ப.பா. ரமணி தலைமையில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்து எடுத்தனர்,
இந்துஸ்தான் கல்வி சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்.சரசுவதி கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார் ,இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அ. பொன்னுசாமி, துணைத்தலைவர் கவிஞர் கண்மணி ராசா, ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்,முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் குணசேகர் நன்றி கூறினார்.