மனித உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால்த உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால்
மனித உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால்
கோவை அக் 4,
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியான ரெசிடென்சி டவர்ஸில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில், மனித உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி, மாநகர காவல் துறை பங்களிப்பில் செப் 3,4, என இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழகம்,கர்நாடகாவின் காவல்துறை அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பெறப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களில் , அதிகார துஷ்பிரயோகம், அதிகப்படியான அதிகாரத்தை பயன் படுத்தியது , காவல் பாதுகாப்பில் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகளை குறித்தும், களப்பணியாளர்கள் காவல்துறையின் பணி தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கடைபிடிக்கவேண்டிய மனித உரிமைகள் அவற்றின் அவசியம் குறித்து, அது தொடர்பான சட்ட விளக்கங்கள். வழக்கு விபரங்கள், பிற சந்தேகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது
இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பிற்கு காவல்துறை (பொது) தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமையில் , தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 காவல் கண்காணிப்பாளர்கள். 37 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 1 காவல் துணை கண்காணிப்பாளர் ஆகிய 44 உயரதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றனர்,
இப் பயிற்சிக்கு, கர்நாடகா மாநில காவல்துறை கூடுதல் இயக்குனர் (மனித உரிமைகள்) தேவஜோதி, கர்நாடக சிறைத்துறை அகடாமி இயக்குனர் சோமசேகர், பெங்களூர் .பரசுராமா, குற்றப்புலனாய்வு துறை (நிர்வாகம்).அருணங்சு கிரி. பெங்களூர் காவல் துணை ஆணையர் (நகர ஆயுதபடை) D.L.நாகேஸ் , கர்நாடகா காவல் துறை அகாடமி, உதவி இயக்குனர்
சென்னபசவண்ண லங்கோட்டி ஆகியோர் பங்கேற்றனர்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில், அதன் புலன் விசாரணைக்கான டைரக்டர் ஜெனரல் அஜய் பட்னாகர் , தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய
உறுப்பினர் வி. கண்ணதாசன், தேசிய மனித உரிமை ஆணையத்தின் (சட்டம்) பதிவாளர் ஜோகிந்தர் சிங் , கர்நாடக மாநில மனித உரிமைகள் பிரிவின் காவல்துறை கூடுதல் இயக்குனர் .தேவஜோதி ரே, தேசிய மனித உரிமைகள் ஆணைய பொதுச்செயலாளர் பரத்லால் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ராஜிவ் ஜென் ஆகியோர் பயிற்சி முகாமில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள், அவை தொடர்பான சட்டங்கள், மனித உரிமை வழக்குகள் குறித்த விபரங்களை எடுத்துரைத்து, விளக்கங்களை அளித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள் இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமின் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் விக்ரம் ஹரி மோகன் மீனா, மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் துஷ்யந்த் சிங் இருந்தனர்
பயிற்சி முகாமின் தேவைகள் மற்றும் நோக்கம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணைக்கான டைரக்டர் ஜெனரல் .அஜய் பட்னாகர் எடுத்துரைத்தார்
முன்னதாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் /தலைவர் . சங்கர் ஜிவால், திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, உரையாற்றி, அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.இதில் கோவை மாநகர காவல் ஆணையர் .பாலகிருஷ்ணன் பயிற்சி வகுப்பின் அத்தியாவசியம் குறித்து எடுத்துரைத்தார் , பயிற்சி முகாம் ஏற்பாடு செய்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை டைரக்டர் ஜெனரல் அஜய் பட்னாகர், தமிழ்நாடு காவல்துறை சார்பாக முகாமை கோவையில் நடத்திட கோவை மாநகர காவல்துறைக்கு வாய்ப்பு தந்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் , பயிற்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட சாமுண்டீஸ்வரி , இதில் பங்கேற்ற கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் .செந்தில் குமார், கோவை சரக காவல்துறை கூடுதல் தலைவர் .சரவண சுந்தர்,மற்றும் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியை மாநகர் காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொண்டனர்