கோவை,வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் வனத்துறையினர் மீது வியாபாரிகள் கலெக்டரிடம் புகார் மனு

Spread the love

கோவை,வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் வனத்துறையினர் மீது வியாபாரிகள் கலெக்டரிடம் புகார் மனு

 

வால்பாறை அக் 4,

கோவை மாவட்டம் வால்பாறையில் மேற்கு தொடர்ச்சி மலை அழகையும், இயற்கை சூழந்த இடங்களை காண, பல்வேறு காலகட்டங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள், இதனால் வால்பாறை அதன் சுற்று பகுதிகளில் வியாபாரிகள் சிற்றுண்டிகள், தங்கும் விடுதிகளில் தங்கவும் ,இன்னும் பிற உணவு வகைகளை ருசிக்க சுற்றுலா வரும் பயணிகளையும் கவரும் விதமாக, இயற்கை இடங்களை சுற்றி பார்க்க வழிகாட்டிகள் (கைடுகள்) உள்ளதால் தமிழ் நாடு மட்டுமின்றி பிற மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் இயற்கையை ரசிக்க, சுற்றி பார்க்க விரும்பி பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகை தருவார்கள், இதனால் வியாபாரிகள்,எங்களுக்கு வருவாய் கிடைக்கும், அதில் எங்கள் குடும்ப வாழ்க்கை நடக்கும் என்றனர் , இந்த நிலையில் வால்பாறை போலீசாருடன் சேர்ந்து வனத்துறை காவலர்கள்,சுற்றுலா தலங்களை பார்க்க விடாமல் பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி பயணிகளை அச்சுறுத்தி வருகின்றனர், மேலும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து நுழைவு கட்டணம் வசூலித்து விட்டு சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்கு அனுமதிக்காமல் வார இறுதி நாட்களான, சனி ஞாயிறு, ஆகிய நாட்களில் பெரும்பான்மையான இடங்களை மூடுவதாலும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளவதோடு பல இன்னலுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகி பண விரயமும்,வெகு தூரத்தில் இருந்து வந்தும் இயற்கை இடங்களை காண முடியாத போது வருத்தம் ஏற்படுகிறது என்றனர், இதனால் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் பொழிவிழந்து காணப்படுகிறது, வணிகர்களுக்கு வியாபாரமும் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்து வருகின்றனர், இதனை கண்டித்து பலமுறை வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகம், காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால் தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மாநில துணைச் செயலாளர் .P.பரமசிவம் மாநில செயற்குழு தலைவர் சரவணன், கோவை மாவட்ட செயலாளர் .கவியரசன் மற்றும் வால்பாறை நிர்வாகிகளுடன் சென்று புகார் மனு அளித்தனர், இதில் ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மாஹளிய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிராம்ம முகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
Next post மனித உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால்த உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால்