திமுக மருத்துவ அணியின் பணிகள் குறித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடந்தது.

Spread the love

திமுக மருத்துவ அணியின் பணிகள் குறித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடந்தது.

 

திமுக மருத்துவ அணியுடன் திமுக சட்டமன்றத் தேர்தல் குழுவினர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு மேற்கெண்டனர். அதன் விபரம் வருமாறு:-

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கியுள்ள கழக சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,முதன்மை செயலாளர் அமைச்சர் நேரு,கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமையில் கழக மருத்துவ அணியின் பணிகளை ஆய்வு நடந்தது.

 

மருத்துவ அணி சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கழகப்பணி – மக்கள் பணி – மக்களவைத் தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து விரிவாகக் கேட்டறியப்படட்டது.

 

இதில் மாநில அளவில் தொடங்கி பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மருத்துவ அணியின் நிர்வாகிகள் தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை விளக்கிக் கூறினார்கள் . இதில் மருத்து அணி மாநில செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மற்றும் கனிமொழிசோமு கலந்து கெட்டு விளக்கமளித்தார்கள்.

 

மேலும், சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இப்போதிலிருந்தே பணிகளைத் தொடங்கிட வேண்டுமென்றும், இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் வலியுறுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் : நிறுவன தின விழா
Next post சட்டம் அனைவருக்கும் சமம் பீம்ராவ் சட்ட உதவி மையம் கோவையில் துவக்கம்- உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் பங்கேற்பு