கோவை தனியார் கல்லூரியில் லியோ கிளப் கலாம் அறக்கட்டளை தலைவர் லயன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்
கோவை தனியார் கல்லூரியில் லியோ கிளப் கலாம் அறக்கட்டளை தலைவர் லயன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்
கோவை செப் 6, கோவை நேரு நகர் லயன்ஸ் க்ளப், கேஎஸ்ஜி கல்லூரி, மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை சார்பாக, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது.கோவை சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கல்லூரியில் இன்று, பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, கல்லூரியில் லியோ க்ளப் துவக்கவிழா, மற்றும் மாணவர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி எனும், முப்பபெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் சிறந்த பேச்சாளர் ஆனந்தகுமாரி மாணவர்கள் மத்தியில் தலைமை பண்பு குறித்து சிறப்புறையாற்றினார், கல்லூரியின் முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ் க்ளப் முன்னாள் ஆளுநர், கருணாநிதி, லியோ க்ளப் பை துவக்கி வைத்து விருதுகளை வழங்கினார்,
நிகழ்ச்சியில் கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் லயன்ஸ் செந்தில் குமார் முன்னிலை வகித்தார், இறுதியாக நேருநகர் லயன்ஸ் க்ளப் மோகன் ராஜ் நன்றியுரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் லியோ கிளப்ஸ் மாவட்ட தலைவர் கீதா கணேஷ், குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினார் நேரு நகர் லயன்ஸ் சங்கம் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் பால்ராஜ் பொருளாளர் சுப்பு செந்தில்குமார் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பிரசீதன், விகாஷினி, ஆரோ மீரா, மீனா குமாரி, தேஜஸ்வினி, அக்னி சரவணன், நேரு நகர் பாலசுப்பிரமணி, ராஜேஷ் குமார், சந்திரசேகர், Ksg கலைக் கல்லூரி NSS அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.