நெய்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் இரண்டு பேரை கைது செய்தது நெய்வேலி தெர்மல் போலீஸ்

Spread the love

நெய்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் என்எல்சி மத்திய தொழில் துறை பாதுகாப்பு படைவீரர் இரண்டு பேரை நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்தனர்

கடலூர் அக் 10,

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கம் ஒன்று மண் மேட்டில் கடந்த நான்கு மாதம் முன்பு சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவசங்கரன் வயது 30 இவர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி அங்கு பணியாற்றிய இரண்டு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் இறந்து போன சிவசங்கரன் உடலை சாலையில் எடுத்து வந்து போட்டனர் இதனை அறிந்த அவரது உறவினர்கள் சிவசங்கரன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி சாலை மறியல் ஈடுபட்டனர் பின்னர் இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது சிவசங்கரன் இறந்த வழக்கில் என்எல்சி மத்திய தொழில் துறை பாதுகாப்பு படைவீரர் அனுஜ் வயது 29, அங்கித் சிங் வயது 25, ஆகிய இரண்டு பேரை நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்து நெய்வேலி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீன் குமார் முன் ஆஜர் படுத்தினர் பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கிணற்றில் விழுந்த ஜோடி நரிகளை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்ட சங்கரன்கோவில் வனத்துறையினர் 
Next post வாணியம்பாடி அருகே மின்னல் தாக்கியதில் பட்டதாரி இளைஞர் உயிர் இழந்தார்.