கோவை மாநகர்,மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தினமலர் நாளிதழை எரித்து போராட்டம் 

Spread the love

கோவை மாநகர்,மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தினமலர் நாளிதழை எரித்து போராட்டம் 

கோவை ஆக் 31,

தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை எரித்து கோவை திமுக இளைஞர் அணியினர் போராட்டம்

 

தமிழ்நாடு அரசு மாணவர்கள் இடைநில்லா கல்வி பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.. அதில் இந்தியா முழுவதும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர பல மாணாக்கர்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளனர்..இதன் காரணமாக ஏற்கனவே வழங்கிய சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆரம்ப பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு அந்தத் திட்டம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக பேசப்பட்டது..

 

தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர்

இத்திட்டத்தை தமிழ்நாட்டில் வந்து எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிலையில் இன்றைய தினமலர் நாளிதழில்(திருச்சி) காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி முதல் பக்கம் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

இந்த செய்தி தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் , தமிழ் பற்றாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் தினமலர் நாளிதழை எரித்து அவர்களுக்கு எதிராக கோஷங்கள் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

கோவையில்

தினமலர் நாளிதழை கண்டித்து டவுன்ஹால் மணிக்கூண்டில், திமுக மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் தலைமையில் திமுக இளைஞரணி மற்றும் மணாவரணியினர் தினமலர் நாளிதழை எரித்தும், கண்டன கோசங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.

இதில் இளைஞரணியை சேர்ந்த அருண், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், மசூத், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தனது எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டத்தில் மாநகர மேயருக்கும் திமுக மண்டல தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம். 
Next post கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பித்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூர் கலெக்டர்