சர்வ கட்சி சார்பில் சீத்தாராம் யெச்ரிக்கு இரங்கல் கூட்டம்.
புதுக்கோட்டை அருகே சர்வ கட்சி சார்பில் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம்.
புதுக்கோட்டை;செப்.15:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சர்வ கட்சி சார்பில் மறைந்த சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம் ஆலங்குடி பஸ் ஸ்டாண்டில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக பணியாற்றி மறைந்த சீத்தாராம் யெச்சூரிக்கு வீர வணக்கம், புகழ் அஞ்சலி கூட்டத்தில் நகரச் செயலாளர் பாலசுப்ரமணியன் அவரது வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்திற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திமுக கேபி கேடி.தங்கமணி நகரச்செயலாளர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இரங்கல் கூட்டத்திற்கு சிபிஐ(எம்,) திமுக ,மதிமுக, எஸ்டிபிஜ,விசிக,சிபிஐ,சி பிஐ(எம்எல்), காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம், ஆகிய சர்வ கட்சியினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்களும் இறந்த அகில இந்திய பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரிக்கு சிறப்பு குறித்து பேசி தங்கள து இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சீதாராம்யெச்சூரிக்கு வீர முழக்க வணக்கத் தை கோஷங்களாக எழுப்பினார்கள்.சித்தாராம் யெ ச்சூரிக்கு மலர் தூவி மரியாதை செய்து வீர வணக்க, புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி சாராத மக்கள் கலந்து கொண்டனர்.