கே.எம்.சி.எச் மருத்துவ மனையில் பாலியேட்டில் கேர் பிரிவை தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா திறந்து வைத்தார்.

Spread the love

கே.எம்.சி.எச் மருத்துவ மனையில் பாலியேட்டில் கேர் பிரிவை தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா திறந்து வைத்தார்.

 

புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை அளிக்கும் வகையில் தி கார்டியன் எனும் திட்டத்தில் கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் பாலியேட்டிவ் கேர் எனும் பிரத்யேக வார்டு துவக்கப்பட்டது…

புற்றுநோயுடன் மன உறுதியுடன் போராடி குணமடைந்தவர்களையும் நோயிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்களை பாராட்டும் வகையிலும் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஒவ்வொரு வருடமும், ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக 11 வது ஆண்டாக நடைபெற்ற ரோஸ் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களை சிறப்பு கவனத்துடன் சிகிச்சை வழங்கி பராமரிக்கும் பிரத்யேக பாலியேட்டிவ் கேர் மையம் துவங்கப்பட்டது.கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி.பழனிசாமி,உதவி தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில்,பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்..ரோட்டரி கிளப் கோயமுத்தூர் மெரிடியன் மற்றும் ஆட்டிடியூட் சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய இரண்டு அமைப்புகளும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையுடன் இணைந்து ‘தி கார்டியன்’ என்ற திட்டத்தின் கீழ் புற்றுநோய் பாதித்த ஏழை எளிய மக்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்கும் வகையில், பாலியேட்டிவ் கேர் மையம் துவங்கப்பட்டுள்ளது.. கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த வார்டில் நோயாளிகளுக்கு சலுகை கட்டணங்களில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. பாலியேட்டிவ் கேர் என்ற இப்புதிய சேவைப்பிரிவின் மூலம் கேஎம்சிஹெச் அளிக்கும் புற்று நோய் மருத்துவம் மேலும் முழுமைபெற்ற சேவை மையமாகத் திகழ்வதையும், பாலியேட்டிவ் கேர் என்ற மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தையும் மருத்துவமனையின் செயல் இயக்குனர் அருண் பழனிசாமி எடுத்துரைத்தார்.

ரோஸ் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து கேஎம்சிஹெச் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள். அவர்கள் குடும்பத்தினர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அமைச்சர் முத்துசாமிக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கத்தின் தேசிய துணை தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.
Next post தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.. புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2019 ஆண்டு தமிழகத்தில் அதிமுக தலைமைகளில் வலுவான கூட்டணி உருவானது, அதே போல தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தும் வகையில் 25 ஆண்டு நிறைவு சாதனை விழா டெல்லியில் நடைபெற்றது.தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இரண்டு நாட்களாக கூட்டணிக்குள் இருக்கின்ற இரண்டு(பாஜக – அதிமுக)நண்பர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.இதெல்லாம் விட்டுவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.. தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்றப்படக்கூடிய பல திட்டங்கள் சரியான நிறைவேற்றப்படாமல் கிராமங்களில் சாலைகளை போடாவில்லை,ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீரடைந்து சந்தி சிரிக்கும் விதமாக இருக்கிறது.மக்கள் விரோத திமுக கட்சியை அகற்ற தேசியத் ஜனநாயகக் கூட்டணி கட்சி நடைபெறும் ஒருமித்து செயல்படுகின்ற நேரம் இதுவாகும். மீண்டும் பிரதமர் மோடியை 3வது முறையாக பிரதமராக ஆக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்,தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும் அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்,பரந்த மனப்பான்மையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.