ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை

Spread the love
பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை
கோவை செப் 18,
பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பசுமை வழித்தடம் உதவியுடன் திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு இரண்டரை மணி நேரத்திற்குள் உடனடியாக அறுவை சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது.
சிக்கலான மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ பரிமாற்றம் கவனத்துடனும் துல்லியத்துடனும் செயல்படுத்தப்பட்டது. திருச்சியிலிருந்து கோயம்புத்தூர் வரை பசுமை வழித்தடம் வழியாக இரண்டரை மணி நேரத்திற்குள் சிக்கலான இருதயக் குறைபாடுள்ள பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை திருச்சி காவல்துறை மற்றும் கோயம்புத்தூர் நகர காவல்துறையின் பெரும் ஆதரவுடன் கொண்டு வரப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அக்குழந்தையை உடனே மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. பிறந்த குழந்தையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது சவலானதாகும்.பிறந்து வென்டிலேட்டர் உதவியுடனிருந்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆம்புலன்ஸில் நடமாடும் வென்டிலேட்டருடன் முழுமையாக பொருத்தப்பட்ட என். ஐ. சி.யூ அமைப்புடன், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் என்.ஐ. சி, யூ செவிலியரின் தொடர் மருத்துவ கண்காணிப்பில் குழந்தை திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு இரண்டரை மணி நேரத்திற்குள் பிரத்யேக பசுமை வழித்தடம் வழியாக வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டது.
குழந்தைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது.மருத்துவர். விஜய் சதாசிவம், தலைமையில் மருத்துவர் .மேன்ப்பிரேட் பெர்னாண்டோ,மருத்துவர் .நரேந்திரன் மேனன், மருத்துவர் . மணிகண்டன் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின்னான மருத்துவ பராமரிப்பு மருத்துவர். சித்தார்த்த புத்தவரபு, மருத்துவர் தேவபிரசாத், மருத்துவர்.சுஜா மரியம் மேற்பார்வையில் முழு கவனிப்பு மற்றும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.மேலும் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.குழந்தையை சரியான நேரத்தில் கொண்டு வரு வதை உறுதி செய்வதற்காக பசுமை வழித்தடத் தை திறம்பட ஒருங்கிணைத்த திருச்சி காவல்துறை மற்றும் கோயம்புத்தூர் நகர காவல்துறையினருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பிரதிஷ்தா பிரச்சாரம் சமூகச் சேவைக்கான நிவா பூபா, ஐஓபி ஆகியவற்றின் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
Next post தாராபுரம் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா