கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் தூதுவர்கள் மாநாடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் தூதுவர்கள் மாநாடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
உலகின் மிக வலிமையான பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளுக்கான ஜி 20 மாநாடுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இரண்டாவது, கோவையில் முதல் மாநாடு ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் தூதுவர்கள் மாநாடு 2023 இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூண்டுகோல் என்ற தலைப்பில் நடந்தது.இந்த உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,கௌரவ விருந்தினர்களாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்,ஜி 20 இந்தியாவின் ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஜி 20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும்,நிர்வாக அறங்காவலருமான மலர்விழி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் அமிதாப் காந்த் சிறப்புரையாற்றினார். இளைஞர்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இளைஞர்களிடையே உரையாற்றினார்.இம்மாநாட்டின் தலைமை உரையை சிறப்பு விருந்தினர் ஆர்.என்.ரவி ஆற்றினார்.
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில் ஜி 20 மாநாடு பற்றிய அறிய பத்திரிகையில் மட்டும் படித்து வந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மோடி தலைமையிலான ஆட்சி வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் நாடுகளுக்கு இன்று இந்திய நாடு தலைமை ஏற்றுள்ளது.மேலும் கடுமையான உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு தடுப்பு மருந்தை இந்தியாவே தயாரித்து 200 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கியதுடன்,அயல்நாடுகளுக்கும் அளித்த பெருமை இந்திய ஒன்றிய பிரதமர் மோடியை சாரும் என கூறினார்.அதுமட்டுமின்றி முழு ஊரடங்கு காலத்தில் இந்திய முழுவதும் உள்ள அனைத்து பகுதியிலும் உள்ள மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க கல்வி தொலைக்காட்சி தொடங்கி இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை நமது பிரதமரையே சாரும் என கூறுனார்.தொடர்ந்து பேசிய ஒன்றிய இணை அமைச்சர் எல்முருகன் புதிய கல்வி கொள்கையில் தாய் மொழியில் ஆரம்பக்கல்வி கற்பிபதுடன், உலகதரத்திற்கு நமது கல்வியின் தரத்தை உயர்த்திட இந்திய பிரதமர் திட்டமிட்டு வருகின்றார். இந்திய பிரதமர் மோடியின் கடந்த 9 ஆட்சியில் இந்திய பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது என்று கூறினார்.இதனை தொடர்ந்து இந்திய ஜி 20 ஷெர்பா அமிதாப் காந்த் உரையாற்றினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் இந்த ஜி 20 மாநாட்டை ஶ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் நிறுவன தலைவரும், நிர்வாக அறங்காவலர் மலர்விழி மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார் என பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஜி 20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயண்படுத்து பவர்களுக்கான கூட்டு கல்வி முறை என்ற தலைப்பின் கீழ், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதனை தொடர்ந்து பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பில், மருத்துவரும் சாந்தி ஆஸ்ரம இயக்குனருமான வினு அறம், குப்புசாமி நாயுடு மருத்துவமனை மருத்துவர் சண்முக பிரியா, மற்றும் திரைப்பட நடிகை கெளதமி க்கு பாராட்டு விழா மற்றும் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது