தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கோவை மாநகர் மாவட்ட விசிக சார்பில் கொண்டாடப்பட்டது
தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூகநீதி நாளாக கோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் குமணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
கோவை செப் 17,
சமூகநீதி பாதுகாவலர், வெண் தாடி வேந்தர் என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர் மாவட்ட விசிக சார்பில் மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமையில் புலியகுளம் பகுதி அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி,உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் தந்தை பெரியார் புகழை கோசமாக எழுப்பினர்.
அதன் பின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் பேட்டி அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-
சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வழிகாட்டுதல் படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ளது. இந்த சமூகதீதி நாளில் கோவையில் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தி உள்ளோம். மேலும் கோவையில் பாசிச வெறிபிடித்த மதவெறி சத்தான கும்பாலை விரட்டி அடிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.அதே போல் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டிற்கு இன்று முதல்15 நாட்களுக்கு மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த துண்டு அறிக்கைகளை மக்களுக்கு நேரடியாகயும்,பேரணியாகவும் சென்று வழங்கப்படும். மேலும் ஆட்டோக்களில் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசி அனைவராலும் பகிரப்பட்ட வீடியோகளை 6 ஆட்டோக்களில் பொது மக்களுக்காக ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம்.மேலும் 3 ஆட்டோக்களில் மாநாட்டிற்கான விளம்பரத்தை பொறுத்தி 100 வார்டுகளிலும் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த சமூகநீதி நாளில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை வெற்றி பெற செய்ய உறுதி ஏற்றுள்ளோம் என தெரிவித்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை சேது,மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர்கோவை ராசா, மாவட்ட தொண்டரணி துணை செயலாளர்கள்
சிறுத்தைஅக்கீம், கொங்கு சம்பத், தாளாளர் அருளரசுசாலமன், சிறுத்தை மணிகண்டன்,மேத்யூ, விமல்,சித்ரா, கவிதா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.