திருப்பூர் மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு
திருப்பூர் மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் அமைச்சர் கயல்விழி செலாவராஜ் பங்கேற்பு
திருப்பூர் -செப்-15
திருப்பூர்மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட கழக மகளிரணி மகளிர் தொண்டரணி மற்றும் சமூகவலையதள பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் மகளிர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார் புதிதாக உறுப்பினர் சேர்க்கை கழக அரசின் சாதனைகளையும் இல்லந் தோறும் கொண்டு சேர்ப்பது,கழக அரசின் சாதனைகளை திண்ணைப் பிரச்சாரம் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தல், கழக முப்பெரும் விழாவில் குடும்பத்தோடு கலந்து கொள்ளுதல், இல்லந்தோறும் கழக இரு வண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட மகளிரணி தொண்டரணி அமைப்பாளர், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்